Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘இலங்கையை ஐக்கியப்படுத்த எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தயாராக இல்லை’

T

The Leader Desk

பிப்ரவரி 21, 2024 • 4:58 AM

‘இலங்கையை ஐக்கியப்படுத்த எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தயாராக இல்லை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேட்பாளரும் தயாராக இல்லை எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
  • நாடாளுமன்றில் நேற்றைய தினம் (20) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
  • இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “போராட்ட காலப்பகுதியிலே கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வடக்கு கிழக்கிலே ஒரு நடைமுறை அரசை எமது தேசிய தலைவர் நிறுவியிருந்தார்.
  • அது எவ்வளவு நேர்த்தியாக அந்த வங்கிகளில் பாதுகாக்கப்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
எழுத்து அளவு:

வேட்பாளரும் தயாராக இல்லை எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் (20) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போராட்ட காலப்பகுதியிலே கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வடக்கு கிழக்கிலே ஒரு நடைமுறை அரசை எமது தேசிய தலைவர் நிறுவியிருந்தார். அங்கே ஒரு பொருளாதார செழுமையை எமது மக்கள் அனுபவித்திருக்கின்றார்கள். அங்கே பொருளாதார ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பான சூழலிலும் மக்கள் வாழ்ந்த வரலாறு காணப்படுகிறது.

“எமது பிரதேசத்திலே இன அழிப்பை செய்து அந்த பிரதேசத்தை கைப்பற்றிய போது எவ்வளவு பெருந்தொகையான தங்கங்களை கைப்பற்றினீர்கள். அது எவ்வளவு நேர்த்தியாக அந்த வங்கிகளில் பாதுகாக்கப்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு யுத்த சூழலுக்குள்ளும் எமது தேசம் முழுமையாக வளர்ச்சியடைந்து காணப்பட்டதற்கு அங்கு உண்மையும் நேர்மையும் அர்ப்பணிப்பும் உள்ள தலைவர் அங்கு இருந்தார்.

“ஆனால் நீங்கள் உலக நாடுகளிடமிருந்து பெருந்தொகை நிதிகளைப் பெற்று யுத்தத்தை செய்திருந்தும் கூட யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்தும் கூட நாடு அதளபாதாளத்துக்குள் வீழ்ந்திருக்கின்றது என்றால் ஒன்று உங்களின் தலைவரில் நேர்மையில்லை. இரண்டாவது இத் தீவிலே வாழும் அனைத்து சமூகங்களையும் அரவணைத்து செல்லும் மனப்பான்மை உங்களிடம் இல்லை.

“ஆகவே, உங்களுடைய போக்கிலே ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும். அதேவேளை, தமிழர்கள் இந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் இந்த ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு எங்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டு தமிழர் தேசம் சமத்துவமாக சிங்கள தேசத்துடன் வாழக்கூடிய ஒரு சமஸ்டி அரசியலமைப்பை கொண்டுவர நீங்கள் முன்வர வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...