Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘எங்களை தொப்புள்கொடி உறவு என்று சொல்லாதே’!: யாழ். இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

T

The Leader Desk

பிப்ரவரி 20, 2024 • 7:47 AM

‘எங்களை தொப்புள்கொடி உறவு என்று சொல்லாதே’!: யாழ். இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
  • இந்நிலையில், காலை 11 மணியளவில் கடற்றொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்ட பேரணியாக தூதுவராலயத்தை நோக்கி முற்றுகையிடச் சென்றபோது, தூதுவராலயத்திற்கு அருகாமையில், பொலிஸாரால் போராட்டக்காரர்கள் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.
  • இதன் போது போராட்டக்காரர்கள் இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
எழுத்து அளவு:

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு கடற்றொழிலாளர் சங்கங்கள் இணைந்து இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் தூதுவராலயம் முன்பாக பெரிமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், தூதுவராலயம் முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காலை 11 மணியளவில் கடற்றொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்ட பேரணியாக தூதுவராலயத்தை நோக்கி முற்றுகையிடச் சென்றபோது, தூதுவராலயத்திற்கு அருகாமையில், பொலிஸாரால் போராட்டக்காரர்கள் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் ஏழு பேர் மட்டும் தூதுவராலயத்திற்கு சென்று தூதுவரைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது போராட்டக்காரர்கள் இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது “இந்திய இழுவை படகு உரிமையாளர்களே! எங்களையும் வாழ விடுங்கள்”, “கடற்தொழிலாளர்களை பிரித்தாழும் தந்திரத்தை செய்யாதே!”, “தொப்புள்கொடி உறவுகளை பிரிக்காதே!”, “இந்திய அரசே இலங்கையின் வடபகுதி மீனவர்களை திரும்பிப்பார்!”, “அத்துமீறும் இந்திய மீனவரின் அராஜகம் அடியோடு ஒழிய வேண்டும்!”, “சட்டவிரோத அத்துமீறலை தடுத்து நிறுத்து!” மற்றும் “வடக்கு மீனவர்களின் வளங்களை சூறையாடாதே!” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஸ்ரீபோது போராட்டகாரர்களை இடைமறித்த பொலிஸாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த கடற்றொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்ததுடன் பெருமளவிலான பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...