Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

வியாழேந்திரனை பதவி நீக்கக் கோரி சவப்பெட்டிகளுடன் உண்ணாவிரதம்

T

The Leader Desk

பிப்ரவரி 19, 2024 • 9:52 AM

வியாழேந்திரனை பதவி நீக்கக் கோரி சவப்பெட்டிகளுடன் உண்ணாவிரதம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கோரியும் மண் அனுமதி பத்திரம், கல்குவாரி அனுமதிப் பத்திரம் கோரிய சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • மண் அனுமதி பத்திரம் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் சவப்பெட்டிகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இதேவேளை இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களிடம் வினவியபோது, “ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1350 மண் அனுமதி பத்திரங்கள் உள்ளது.
எழுத்து அளவு:

கோரியும் மண் அனுமதி பத்திரம், கல்குவாரி அனுமதிப் பத்திரம் கோரிய சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம், செங்கலடி பிரதேச செயலக வீதி ஓரத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சில மண் அனுமதி பத்திரம் வைத்துள்ளவர்களும், கல்குவாரி வைத்துள்ளவர்களும் மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஐந்து வருடங்களாக நாங்கள் மண் அனுமதி பத்திரம் வைத்துள்ளோம். ஆனால் தற்போது எமது மண் அனுமதி பத்திரம், கல்குவாரி அனுமதிப் பத்திரத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

“செங்கலடி பிரதேச செயலாளரிடம் கேட்டால் அபிவிருத்தி குழு தலைவரிடம் அனுமதி எடுத்தால்தான் மண் அனுமதி பத்திரம் வழங்க முடியும் என்கின்றனர். எனவே எமக்கான மண் அனுமதி பத்திரம் மற்றும் கல்குவாரி அனுமதிப் பத்திரத்தை வழங்க வேண்டும்.

“மண் அனுமதி பத்திரத்தை நிறுத்தி வைத்துள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களின் அபிவிருத்தி குழு தலைவர் பதவியை நீக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண் அனுமதி பத்திரம் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் சவப்பெட்டிகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களிடம் வினவியபோது, “ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1350 மண் அனுமதி பத்திரங்கள் உள்ளது. இதனால் மாவட்டத்தின் கனிம வளங்கள் அழிக்கப்படுவது மட்டுமல்லாது விவசாய நிலங்கள் வீதிகள், முற்றாக அழிவடைகின்றது.

“வெளி மாவட்டங்களில் இருந்து வந்தது இங்குள்ள வயல் நிலங்களை பலர் அழித்துள்ளனர். கடந்த காலங்களில் மணல் அகழ்ந்தெடுக்கப்பட்ட காணிகள் குளங்களாக மாறியுள்ளது.

“இவற்றை எல்லாம் சீர் செய்தால் மாத்திரமே மண் அனுமதி பத்திரம் வழங்க முடியும் என பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் சில மண் மாபியாக்கள் இந்த மாவட்ட மண்ணை விற்பனை செய்வதற்காக எந்த அளவுக்கும் செல்ல தயாராக உள்ளனர். அந்த அடிப்படையில் இவ்வாறான போராட்டங்களை செய்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...