Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

தமிழ்க் கட்சிகள் பிளவுபட்டிருப்பதற்கு இந்தியா வருத்தம்

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2024 • 11:37 AM

தமிழ்க் கட்சிகள் பிளவுபட்டிருப்பதற்கு இந்தியா வருத்தம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ் அரசியல் பிரமுகர்களிடம் வலியுறுத்தினார்” என்று, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
  • நெடுந்தீவுக்கு அன்பளிப்பாக ஒரு படகு ஒன்றைப் பெற்றுத் தருமாறும் கோரினேன்.அதற்கான கோரிக்கையைத் தான் சமர்ப்பிப்பார் எனவும், இலங்கை அரசுடன் இது பற்றி தான் பேசவுள்ளார் எனவும் இந்தியத் தூதுவர் உறுதியளித்தார்” என்றார்.
  • இலங்கைக்கான இந்தியத் தூதுவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரை நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
எழுத்து அளவு:

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ் அரசியல் பிரமுகர்களிடம் வலியுறுத்தினார்” என்று, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரை நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சி.வி.கே. சிவஞானம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தியத் தூதுவருடன் பல விடயங்கள் பற்றி உரையாடி இருந்தோம். குறிப்பாக நெடுந்தீவுக்கான போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினேன். நெடுந்தீவுக்கு அன்பளிப்பாக ஒரு படகு ஒன்றைப் பெற்றுத் தருமாறும் கோரினேன்.அதற்கான கோரிக்கையைத் தான் சமர்ப்பிப்பார் எனவும், இலங்கை அரசுடன் இது பற்றி தான் பேசவுள்ளார் எனவும் இந்தியத் தூதுவர் உறுதியளித்தார்” என்றார்.

“தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் ஏதும் பேசப்பட்டதா?' என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சி.வி.கே. சிவஞானம்,

“அரசியல்வாதிகள் ஒவ்வொருடனும் தனித்தனியே இந்தியத் தூதுவர் கலந்துரையாடினார். என்னுடன் கதைக்கும்போது தமிழ்க் கட்சிகளின் பிளவு வருத்தமளிக்கின்றது என்று தூதுவர் தெரிவித்தார்.

“தற்போதுள்ள தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை பற்றி பேசப்படும் நிலையில் தமிழ்க் கட்சிகள் மேலும் பிளவடைகின்றன. இருக்கின்ற தமிழ்க் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தூதுவர் கூறினார்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...