Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இணையப் பாதுகாப்பு சட்டமூலம்: சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல் செய்த சுமந்திரன்

T

The Leader Desk

பிப்ரவரி 16, 2024 • 12:06 PM

இணையப் பாதுகாப்பு சட்டமூலம்: சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல் செய்த சுமந்திரன்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
  • உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படி, யோசனையின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை.
  • இதன்படி சபாநாயகரால் சான்றளிக்கப்பட்ட சட்டத்தில் 13 முரண்பாடுகள் இருப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இணையப் பாதுகாப்புச் சட்டத்திற்கு சபாநாயகரின் சான்றிதழ் செல்லாது என அறிவிக்குமாறு சுமந்திரன் தனது மனுவில் கோரியுள்ளார்.

இணையப் பாதுகாப்பு யோசனை, உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்கச் செயற்படுத்தப்படவில்லை என்று மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை மனுதாரர், தமது மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படி, யோசனையின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை.

இதன்படி சபாநாயகரால் சான்றளிக்கப்பட்ட சட்டத்தில் 13 முரண்பாடுகள் இருப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். அத்துடன் அது, சட்டமாக இயற்றப்படுவதற்கு ஆதரவாக மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தேவைப்படும் என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற நடைமுறையின் அடிப்படையில் சட்டமூலம் ஒன்று அரசியலமைப்பிற்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தேவைப்படும் போதெல்லாம், ஆதரவாக வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

எனினும் யோசனை தொடர்பான இரண்டாவது வாசிப்பிலோ அல்லது மூன்றாம் வாசிப்பிலோ மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினரின் ஆதரவை நாடாளுமன்றம் பெறவில்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அரசியல் சட்டத்தின்படி இணையப் பாதுகாப்பு யோசனை ஒருபோதும் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...