Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சுகாதாரப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

T

The Leader Desk

பிப்ரவரி 15, 2024 • 5:28 AM

சுகாதாரப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
  • வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35000 ரூபா கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முவைத்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னர் பணி புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.
  • இதையடுத்து நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததன் காரணமாக கடந்த 13 ஆம் திகதி மீண்டும் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.
  • அன்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதும் தீர்மானம் எட்டப்படாத நிலையில், தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்து நேற்றைய தினமும் (14) குறித்த 72 தொழிற்சங்கங்களும் தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டன.
எழுத்து அளவு:

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35000 ரூபா கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முவைத்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னர் பணி புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.

பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு வழங்கப்படுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து குறித்த நடவடிக்கையை அவர்கள் கைவிட்டனர். இதையடுத்து  நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததன் காரணமாக கடந்த 13 ஆம் திகதி மீண்டும் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அன்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதும் தீர்மானம் எட்டப்படாத நிலையில், தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்து நேற்றைய தினமும் (14) குறித்த 72 தொழிற்சங்கங்களும் தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டன. இதையடுத்து, வருகிற திங்கட்கிழமை அதாவது 19 ஆம் திகதி சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்படி, தமது கொடுப்பனவுகளில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பை  இன்றைய தினம் (15) காலை 06.30 மணி முதல் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 72 சுகாதார தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...