Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

மலையகத்தில் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

T

The Leader Desk

பிப்ரவரி 14, 2024 • 2:41 PM

மலையகத்தில் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
  • மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமை, பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
  • புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் முற்போக்கு கூட்டணியின் சார்பில் பங்கேற்றனர்.
எழுத்து அளவு:

உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் முற்போக்கு கூட்டணியின் சார்பில் பங்கேற்றனர்.

மலையக தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார ,கலாசார அபிலாஷைகள் பற்றியே குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான நகர்வாகவே இது உள்ளது என முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் தெரிவித்தனர்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமை, பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு அடுத்தபடியாக கூடுதல் எம்.பிக்களை தமிழ் முற்போக்கு கூட்டணியே அதிக எம்.பிக்கள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியின்கீழ் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள், மலையக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு செயலணி ஒன்று உருவாக்கப்படும். காணி உரிமையும் நிச்சயம் கிடைக்கும். நல்லாட்சியின்போதும் நாம் சொல்லியவற்றை செய்துள்ளோம்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...