Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்தியாவுக்கு ரணில் வழங்கிய பதில்!

T

The Leader Desk

பிப்ரவரி 12, 2024 • 2:21 AM

ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்தியாவுக்கு ரணில் வழங்கிய பதில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இந்த வருடம் நடைபெறவுள்ளதாகவும் மாகாண சபை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
  • நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தபோது, 04 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா கடனாக வழங்கியது.
  • அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, பேர்த்தில் உள்ள இந்திய ஊடகமான WION இன் இராஜதந்திர நிருபர் சிதாந்த் சிபலுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இந்த வருடம் நடைபெறவுள்ளதாகவும் மாகாண சபை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, பேர்த்தில் உள்ள இந்திய ஊடகமான WION இன் இராஜதந்திர நிருபர் சிதாந்த் சிபலுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார்.

மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டுமாயின, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு, வந்து கடனில் இருந்து மீள்வதே தனது கவனத்தை முதன்மையாக கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா என ஊடகவியலாளர் சித்தந்த் சிபல் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி,

“நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வந்தேன். அதில் கவனம் செலுத்தி, திவால் நிலையில் இருந்து எங்களை மீட்டெடுப்பதே எனது முதல் கடமை. நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தபோது, 04 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா கடனாக வழங்கியது. அந்த உதவி கிடைத்திருக்காவிட்டால், இலங்கையால் மீண்டெழ முடியாதிருந்திருக்கும்” என ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்ததுடன், அதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும், ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் நாட்டை ஓரளவு ஸ்திரத்தன்மைக்கு விரைவாக கொண்டு வர முடியும் என்ற எண்ணம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அதில் திருப்தி அடைவதாக தெரிவித்தார்.

இதனை (நாட்டை மீளக் கட்டியெழுப்ப) நிறைவேற்ற முடியும் என்று தான் நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இந்திய ஊடகமான WION க்கு ஜனாதிபதியின் முழு நேர்காணல் கீழே உள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...