Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ரணிலுக்கு ஆதரவில்லையென கம்மன்பில அறிவிப்பு

T

The Leader Desk

பிப்ரவரி 10, 2024 • 7:05 PM

ரணிலுக்கு ஆதரவில்லையென கம்மன்பில அறிவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆதரவளிக்கப் போவதில்லை என பிவித்துரு ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
  • இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
  • இந்த நிலையில், குறித்த தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

ஆதரவளிக்கப் போவதில்லை என பிவித்துரு ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஜனாதிபதித் தேர்தலில் தான் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான முடிவை இதுவரை மேற்கொள்ளவில்லை எனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெறவிருந்த தேர்தல்களை தனக்கு ஏற்ற விதத்தில் ஒத்திவைத்திருந்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.

எனினும், இலங்கையின் வரலாற்றில் இதுவரை ஜனாதிபதித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதில்லை எனவும் இதற்கமைய, இந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஜனாதிபதித் தேர்தலும் உரிய நேரத்தில் நடைபெறுமெனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...