Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஹரிஹரனின் யாழ்ப்பாண இசை நிகழ்வில் பார்வையாளர்கள் மீது தாக்குதல்: மூவர் காயம்: அறுவர் கைது

T

The Leader Desk

பிப்ரவரி 10, 2024 • 7:49 AM

ஹரிஹரனின் யாழ்ப்பாண இசை நிகழ்வில் பார்வையாளர்கள் மீது தாக்குதல்: மூவர் காயம்: அறுவர் கைது   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதில் தமன்னா, ரம்பா, யோகிபாபு, ஸ்வேதா மேனன், பாலா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்குபற்றினர்.
  • இந்த நிகழ்வானது கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக பெப்ரவரி 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
  • ஆரம்பத்தில் இலவசம் என அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வானது, பின்னர் 25,000, 7,000, 3,000 மற்றும் பின்னால் நின்று பார்ப்பவர்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டது.
  • இதனால் இசை நிகழ்ச்சி இடையிடையே தடைப்பட்டது.
எழுத்து அளவு:

இதில் தமன்னா, ரம்பா, யோகிபாபு, ஸ்வேதா மேனன், பாலா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்குபற்றினர். இந்த நிகழ்வானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் மற்றும் நோர்த்; யுனியினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வானது கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக பெப்ரவரி 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

ஆரம்பத்தில் இலவசம் என அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வானது, பின்னர் 25,000, 7,000, 3,000 மற்றும் பின்னால் நின்று பார்ப்பவர்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது. முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.

பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன், தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

அத்துடன் இந்த இசை நிகழ்வில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுடன் விருந்து அருந்தி புகைப்படம் எடுப்பதற்கு 30,000 ரூபா என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழுக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பிரபலங்களுடன், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு பணம் அறவிடப்பட்டால் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா ஊடக சந்திப்பில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இசைநிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தவேளை இரசிகர்கள் தடைகளை உடைத்துக்கொண்டு பாய்ந்து உள்நுழைந்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் சிக்கலுக்குள்ளாகினர்.

பின்னர் பொலிஸார் மற்றும் volunteer குழுவினரால் இரசிகர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இசை நிகழ்ச்சி இடையிடையே தடைப்பட்டது. பின்னர் இசை நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டது.

சரியான திட்டமிடல் இன்மையே இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் காசு கொடுத்து ரிக்கெட் வாங்கிய பலர் இருக்கைகள் இல்லாமையினால் அங்கலாய்த்துள்ளனர்.

நொதேண் யுனியில் கல்வி கற்கும் மாணவர்களும் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனை நொதேண் யுனியில் கல்வி கற்கும் மாணவர்களிடம் கூறும்போது அவர்கள், தாங்கள் சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை என்றும், தாங்கள் கல்வி கற்கும் காரணத்தால் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், இது குறித்து மேற்பார்வையாளர்களிடம் முறையிடுமாறும் தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்தோஷ் நாராயணன் அவர்களது இசை நிகழ்ச்சி அதே அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு முற்றிலும் இலவசமாக நடைபெற்றதுடன், அதில் எந்த குழப்பங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் ஹரிஹரன் இசை நிகழ்வில் இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில், 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை, இலவசமாக இசை நிகழ்வை கண்டு கழித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் தடுப்புக்களை உடைத்து எறிந்துகொண்டு, கட்டண அனுமதி பெற்று, இசை நிகழ்வை கண்டு களித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் வலயத்தினுள் நுழைந்து, மேடை வரையில் சென்று இடையூறு ஏற்ப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த உயரமான மேடைகள், ஒலி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்த மேடைகள், பனை மரங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி அட்டகாசத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் இசை நிகழ்வு இடையில் சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டு, பொலிஸார் , விசேட பொலிஸ் அதிரடி படையினர் மேலதிகமாக மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டு , நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து , இசை நிகழ்வை மீள ஆரம்பித்து சில ஒரு மணித்தியாலத்திற்குள் அவசர அவசரமாக முடித்துக்கொண்டனர்.

குழப்பங்களுக்கு நிகழ்வின் ஏற்பாடுகளில் உள்ள குறைகளே காரணம் என பலரும் சமூக வலைத்தளங்களில் தமது கருத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஹரிஹரனின் யாழ்ப்பாண இசை நிகழ்வில் பார்வையாளர்கள் மீது தாக்குதல்: மூவர் காயம்: அறுவர் கைது | Tamil Leader | We Lead the Nation