Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

அநுர, நாமலைத் தொடர்ந்து, மார்ச்சில் இந்தியா செல்கிறார் சஜித்

T

The Leader Desk

பிப்ரவரி 10, 2024 • 6:13 AM

அநுர, நாமலைத் தொடர்ந்து, மார்ச்சில் இந்தியா செல்கிறார் சஜித்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
  • இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தேசிய மக்கள் படையின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷ எம்.பியின் இந்திய விஜயம் இடம்பெற்று வருகின்றது.
  • அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் செல்வதற்காகவே, அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
எழுத்து அளவு:

இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் செல்வதற்காகவே, அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு, நேற்று மாலை ராமர் கோவிலில் விஷேட பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அயோத்தி மற்றும் புதுடெல்லியில் தங்கியிருக்கும் போது, நாட்டின் அரசியல் துறையில் உள்ள பல்வேறு நபர்களை தனிப்பட்ட அளவில் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

அவரது அயோத்தி ராமர் கோவில் விஜயம், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாச்சார மற்றும் மத உறவுகளை வலுப்படுத்துவதில் நாமல் ராஜபக்ஷவின் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது என்று சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கவனத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதாக, அந்த ஊடகச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தேசிய மக்கள் படையின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷ எம்.பியின் இந்திய விஜயம் இடம்பெற்று வருகின்றது.

இது ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் என்றும் அதன் கடைசி நாள் நேற்று என்றும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயத்தை விமர்சித்திருந்தார்.

ஜே.வி.பியின் அழுத்தத்தினால், இலங்கை பல இந்திய மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களை இழந்துள்ளதாகவும் அவர் குற்றம்சுமத்தியிருந்தார்.

தற்போது அவர்களின் இந்திய விஜயத்தின் பின்னர், இந்திய முதலீடுகள் இலங்கைக்கு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படாதிருக்குமென்று தான் நம்புவதாகவும், நாமல் குறிப்பிட்டிருந்தார்.

அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவும், எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...