Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ரணிலுடன் கை கோர்க்கும் அநுர: இந்தியாவின் அறிவிப்பால் ஆட்டம்கண்ட இலங்கை அரசியல்

T

The Leader Desk

பிப்ரவரி 9, 2024 • 7:32 AM

ரணிலுடன் கை கோர்க்கும் அநுர: இந்தியாவின் அறிவிப்பால் ஆட்டம்கண்ட இலங்கை அரசியல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வஜிர அபேவர்தன, அநுரகுமார திசாநாயக்கவின் கட்சி, தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • “அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் ஜே.வி.பியின் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும்” என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள வஜிர கூறியுள்ளதாவது, “தேசிய மக்கள் சக்தி, உலகத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்ல விடயமாகும்.
எழுத்து அளவு:

வஜிர அபேவர்தன, அநுரகுமார திசாநாயக்கவின் கட்சி, தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள வஜிர கூறியுள்ளதாவது,

“தேசிய மக்கள் சக்தி, உலகத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்ல விடயமாகும். நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதற்கு, தேசிய மக்கள் சக்தி தமது பங்களிப்பை வழங்கும்.

“இது புதிய விடயம் ஒன்றல்ல. கடந்த காலத்திலும் தேசிய மக்கள் சக்தி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது. 2015ஆம் ஆண்டில், நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியுள்ளது.

“அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் ஜே.வி.பியின் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும்” என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கதான் என்று இந்தியாவின் ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக, ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசியுள்ள அவர், “எங்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார, இந்தியாவுக்கு வெறுமனே செல்லவில்லை. இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்த காரணத்தினாலேயே அவர் அங்கு சென்றுள்ளார்.

“இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார என்று இந்திய ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளதன் காரணமாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அடுத்த அரசாங்கம் எமது தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி தலைமையிலான அரசாங்கமாகத் தான் இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...