Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஐமச அதிரடி தீர்மானம்

T

The Leader Desk

பிப்ரவரி 9, 2024 • 7:23 AM

ஐமச அதிரடி தீர்மானம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
  • இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினுள் முறுகல் நிலை மற்றும் கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றும் வருகின்றது.
  • அவ்வாறு இல்லாவிட்டால் கட்சியின் ஒழுக்கம் சீர்குலைந்து விடும் என கட்சித் தலைமை கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அவ்வாறு இல்லாவிட்டால் கட்சியின் ஒழுக்கம் சீர்குலைந்து விடும் என கட்சித் தலைமை கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றும் போது முழு குழுவும் சபையை விட்டு வெளியேறும் தீர்மானத்தை எடுத்தபோது, ​​அதை புறக்கணித்து ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் தங்கினர்.

இவ்வாறு குழுவாக தீர்மானங்களை எடுக்கத் தவறும் எம்.பி.க்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கட்சியின் தலைமைத்துவம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத்தை புறக்கணித்த போதிலும், ராஜித சேனாரத்ன உள்ளிட்டோர் அந்த தீர்மானத்தை நிராகரித்து பாராளுமன்றத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினுள் முறுகல் நிலை மற்றும் கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றும் வருகின்றது.

இதில் சரத் பொன்சேகா அண்மைய நாட்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும், சரத் பொன்சேகா நேற்று முன்தினம் நாடாளுமன்ற புதிய அமர்வின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவின் வேலைத்திட்டத்தையே ரணில் விக்கிரமசிங்க இன்று முன்னெடுத்துச் செல்வதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தற்போது அதனையே பிரதிநிதித்துவப்படுத்தும் வேலைத்திட்டத்தில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

இந்த திட்டத்தில் சஜித் பிரேமதாஸவா அல்லது ரணில் விக்கிரமசிங்கவா முதலில் சாதிப்பது என்பதில்தான் எல்லாமே தங்கியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...