Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘ஒருபுறம் காணிப் பத்திரங்கள் வழங்கிக்கொண்டு மறுபுறம் தமிழர் காணிகள் அபகரிக்கப்படுகின்றன’

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2024 • 1:53 PM

‘ஒருபுறம் காணிப் பத்திரங்கள் வழங்கிக்கொண்டு மறுபுறம் தமிழர் காணிகள் அபகரிக்கப்படுகின்றன’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடம்பெறும் அநீதிகள் பற்றி முன்வைக்காதது வருத்தளிப்பதாக சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
  • “2 மில்லியன் மக்களுக்கு காணி உறுதி பாத்திரங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டு இருந்தார்.
  • இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இடம்பெறும் அநீதிகள் பற்றி முன்வைக்காதது வருத்தளிப்பதாக சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

“தமிழர்களுக்கு இனரீதியாக பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றது. மத கலாசாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிடாதது வருத்தமளிக்கின்றது.

“2 மில்லியன் மக்களுக்கு காணி உறுதி பாத்திரங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டு இருந்தார். இங்கே காணி பத்திரம் வழங்கப்படும் நேரத்தில் மன்னார் மாவட்டத்தில் சில மக்கள் காணிகள் அபகரிப்பிற்கு உட்பட்டுக்கொண்டிருந்தமை முக்கியமான விடயம்.

“மேலும், யுத்தம் ஏற்பட்டபோது பலர் அரசியல் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டனர். இருந்தும் பலர் ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இன்னும் சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். இராணுவமயமாக்கப்பட்ட தனியார் நிலங்களை மீண்டும் உரியவர்களுக்கு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...