Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ரணிலின் ஆசீர்வாதத்துடன் இந்தியா சென்ற அநுர: தனக்கும் வாய்ப்பு கேட்டு அடம்பிடிக்கும் சஜித்

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2024 • 1:16 PM

ரணிலின் ஆசீர்வாதத்துடன் இந்தியா சென்ற அநுர: தனக்கும் வாய்ப்பு கேட்டு அடம்பிடிக்கும் சஜித்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்கள் விடுதலை முன்னணியின் மாற்றம் மகிழ்வுக்குரியது எனவும், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
  • ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா சென்றுள்ள அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான் தேசிய மக்கள் சக்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தது.
  • இதேவேளை, இந்திய அதிகாரிகளுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ள நிலையில் அதேபோன்றதொரு வாய்ப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் நாடியுள்ளது.
எழுத்து அளவு:

இந்தியாவுக்குச் சென்றுள்ளார் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ள நிலையில், தனக்கும் அதேபோன்றதொரு வாய்ப்பு வேண்டுமென்று, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட அவரது குழுவினர் அதிபரின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் இந்தியாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் வழங்குமாறு இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் மக்கள் விடுதலை முன்னணியினர், இந்திய எதிர்ப்புக் கொள்கையிலிருந்து விடுபட்டு நடைமுறைக்கு ஏற்றாற்போல் செயற்பட முனைவது வரவேற்கத்தக்கது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன். மக்கள் விடுதலை முன்னணியின் மாற்றம் மகிழ்வுக்குரியது எனவும், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய அதிகாரிகளுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ள நிலையில் அதேபோன்றதொரு வாய்ப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் நாடியுள்ளது.

ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா சென்றுள்ள அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான் தேசிய மக்கள் சக்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தது.

தேர்தலுக்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி, இந்தியாவில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிலையில், அரசியல் ஆதாயத்தை நோக்கமாக கொண்டு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அதனை கோரியுள்ள நிலையில் அதற்கு இந்தியாவும் சாதகமாக பதிலளித்துள்ளது.

தென்னிலங்கை அரசியலில் இரு கட்சிகளுக்கும் இடையில் ஒருவரையொருவர் விஞ்சும் அளவுக்கு போட்டி நிலவும் நிலையில், இந்திய அதிகாரிகளுடன் முதலில் கலந்துரையாட தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவலை தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...