Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஜகத் பிரியங்கர சத்தியப்பிரமாணம்

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2024 • 4:57 AM

ஜகத் பிரியங்கர சத்தியப்பிரமாணம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பதவிக்கு, வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட எல்.கே.ஜகத் பிரியங்கர, சபாநாயகர் முன்னிலையின் இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
  • தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய எல்.கே.ஜகத் பிரியங்கர, 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு 40,527 வாக்குகளை பெற்றிருந்தார்.
  • இதேவேளை, மரணத்தை ஏற்படுத்திய வீதி விபத்து தொடர்பில் சந்தேகம் நிலவுதாகவும் அது தொடர்பில் விரிவான விசாரணைகளை கோரி அவரின் மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
எழுத்து அளவு:

பதவிக்கு, வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட எல்.கே.ஜகத் பிரியங்கர, சபாநாயகர் முன்னிலையின் இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நாடாளுமன்றில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய எல்.கே.ஜகத் பிரியங்கர, 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு 40,527 வாக்குகளை பெற்றிருந்தார்.

இதன்படி, இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் மரணத்தை தொடர்ந்து அவரது இடத்துக்கு, ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மரணத்தை ஏற்படுத்திய வீதி விபத்து தொடர்பில் சந்தேகம் நிலவுதாகவும் அது தொடர்பில் விரிவான விசாரணைகளை கோரி அவரின் மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தற்போது தங்கியுள்ள இல்லத்திற்கு சென்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்ற விதம் மற்றும் சாரதியின் நடத்தைகள் தொடர்பிலும் சிக்கல் நிலை காணப்படுவதாக முன்னாள் சனத் நிஷாந்தவின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தமது கணவரின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...