Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

'இலங்கையில் காட்டாட்சி: தேர்தல் நடந்தால் மக்கள் நிச்சயம் பதிலடி வழங்குவர்'

T

The Leader Desk

பிப்ரவரி 6, 2024 • 3:49 AM

'இலங்கையில் காட்டாட்சி: தேர்தல் நடந்தால் மக்கள் நிச்சயம் பதிலடி வழங்குவர்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தல் ஒன்றை இந்த அரசு நடத்தினால் வாக்குகள் மூலம் மக்கள் நிச்சயம் பதிலடி வழங்குவார்கள்.
  • தற்போதைய அரசு கொண்டு வந்துள்ள சட்டவிரோத மற்றும் நியாயமற்ற வரிக் கொள்கை குறித்த விடயங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்தியத் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார்.
  • இதனாலேயே தேர்தல்களை நடத்த இந்த அரசு அஞ்சுகின்றது” என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நடைபெறுகின்றது. தேர்தல் ஒன்றை இந்த அரசு நடத்தினால் வாக்குகள் மூலம் மக்கள் நிச்சயம் பதிலடி வழங்குவார்கள். இதனாலேயே தேர்தல்களை நடத்த இந்த அரசு அஞ்சுகின்றது” என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்தியாவின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் சமூக,பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களுடன் தொடர்பான பல்வேறு விடயங்களை இந்தச் சந்திப்பின்போது இருவரும் பரிமாறிக்கொண்டனர்.

தற்போதைய அரசு கொண்டு வந்துள்ள சட்டவிரோத மற்றும் நியாயமற்ற வரிக் கொள்கை குறித்த விடயங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்தியத் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார். நியாயமற்ற முறையில் அரசு விதித்த பெறுமதி சேர் வரியால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பில் உழைக்கும் மக்களின் ஊழியர்சேம நிதியங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதகமான விளைவுகளின் தாக்கம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது இந்தியத் தூதுவருக்குத் தெளிவுபடுத்தினார்.

தற்போதைய அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளில் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்த விடயங்களையும் இந்தியத் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

திட்டமிட்ட திகதிகளில் நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் வேண்டுமென்றே ஒத்திவைக்கப்பட்டு வருவதான விடயங்கள் குறித்தும் இங்கு எதிர்க்கட்சித் தலைவரால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதுதவிர இந்த வருடம் தேர்தல் வருடமாக அமைந்திருந்தாலும் தற்போதைய அரசு நிகழ்நிலை காப்பு என்ற சட்டத்தை நிறைவேற்றி, மக்களின் கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை, தகவல் அறியும் உரிமை என்பவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

சமூக ஊடக வலையமைப்புகளை முடக்க மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்த இந்தச் சட்டத்தால் முடியும். தேர்தல் வருடத்தில் இவ்வாறான சட்டமூலத்தைக் கொண்டு வருவதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளில் தேவையற்ற தலையீடுகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது மேலும் சுட்டிக்ட்டினார்.

இந்தச் சந்திப்பில் இந்திய பிரதித் தூதுவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு பிரதானி சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'இலங்கையில் காட்டாட்சி: தேர்தல் நடந்தால் மக்கள் நிச்சயம் பதிலடி வழங்குவர்' | Tamil Leader | We Lead the Nation