Tamil Leader News
முக்கியம்
புதிய பாதுகாப்புச் சட்டமூலங்களால் GSP+ சலுகை ஆபத்தில்?●சாஃப் கிண்ணக் கால்பந்து: இலங்கை - பூடான் போட்டி 2-2 என சமநிலையில் நிறைவு!●மான் தாக்கியதில் கைதி உயிரிழப்பு!●உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்; இன்று விசாரணை மீள ஆரம்பம்!●அநுராதபுர அபிவிருத்தி வர்த்தமானியும் இந்திய முதலீடும்: உண்மை நிலை என்ன?●சீனாவின் 'சினொபெக்' எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கைவிட பரிந்துரை!●மன நலத்துக்கு AIஐ நாடும் இளையோர்: இது தீர்வா அல்லது ஆபத்தா?●இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!●மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●
செய்திகள்

இன்று அமைச்சுப் பதவியைத் துறக்கிறார் கெஹெலிய

T

The Leader Desk

பிப்ரவரி 5, 2024 • 6:41 AM

இன்று அமைச்சுப் பதவியைத் துறக்கிறார் கெஹெலிய   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இராஜினாமா செய்யவுள்ளதாக அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர், அவரை பதவி விலகுமாறு நேற்று (04) நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • கடந்த 2ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை, பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பெப்ரவரி 03ஆம் திகதி உத்தரவிட்டது.
  • இந்நிலையிலேயே, அவரது பதவி விலகத் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
எழுத்து அளவு:

இராஜினாமா செய்யவுள்ளதாக அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர், அவரை பதவி விலகுமாறு நேற்று (04) நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை, பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பெப்ரவரி 03ஆம் திகதி உத்தரவிட்டது.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, கடந்த பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி, நோய் எதிர்ப்பு ஊசி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகச் சென்ற போது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெஹலிய ரம்புக்வெல்ல, வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே, அவரது பதவி விலகத் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சுற்றாடல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் சமால் சஞ்சீவ கோரிக்கை விடுத்துள்ளார்.

கெஹலிய அமைச்சரவையில் தொடர்ந்தும் நீடித்தால் அது எதிர்கால விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச அதிகாரியொருவர் நிதி மோசடி, பயங்கரவாத செயல் உள்ளிட்ட குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அவரது பணி இடைநிறுத்தப்படும்.

கெஹலிய அமைச்சரவையை பிழையாக வழிநடத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக சட்ட மா அதிபர் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அவர் அமைச்சரவையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பது பொருத்தமாகாது என அறிவித்துள்ளார்.

மேலும்,கெஹலிய தொடர்ந்தும் அமைச்சரவையில் அங்கம் வகித்தால் சர்வதேச ரீதியில் இலங்கை அமைச்சரவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என நிபுணத்துவ மருத்துவர் சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இன்று அமைச்சுப் பதவியைத் துறக்கிறார் கெஹெலிய | Tamil Leader | We Lead the Nation