வீரவில திறந்தவெளி சிறை முகாமில் புனர்வாழ்வு பெற்று வந்த கைதி ஒருவர், மான் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் சிறை முகாம் வளாகத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சுதந்திரமாக உலாவிக்கொண்டிருந்த மான் ஒன்று அவரை இவ்வாறு தாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வரப்பலான பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார்.
உயிரிழந்தவரின் சடலம் தெபரவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதுடன், இன்று (09) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


