Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தனியார் கடன் வழங்குநர்கள்

T

The Leader Desk

பிப்ரவரி 1, 2024 • 3:57 PM

இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தனியார் கடன் வழங்குநர்கள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை்கான தனியார் கடன் வழங்குநர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
  • இந்த நிலையில், இலங்கை தங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நிதியுதவி கிடைக்கப் பெறுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர்கள் எச்சரித்துள்ளனர்.
  • நல்லெண்ண அடிப்படையில் அரசாங்கம் தனியார் கடன் வழங்குநர்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாவிட்டால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

இலங்கை்கான தனியார் கடன் வழங்குநர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

நல்லெண்ண அடிப்படையில் அரசாங்கம் தனியார் கடன் வழங்குநர்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாவிட்டால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா உள்ளிட்ட இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் அரசாங்கம் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இவ்வாறான பேச்சுவார்த்தைகள் தங்களுடன் மேற்கொள்ளப்படவில்லை என தனியார் கடன் வழங்குநர்கள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீனாவை மாத்திரம் இலங்கை நம்பியிருக்க கூடாதெனவும் தனியார் கடன் வழங்குநர்களின் எண்ணிக்கை மிகவும் பெரியது என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை தங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நிதியுதவி கிடைக்கப் பெறுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அரசாங்கம் தங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளச் செய்வதற்கான ஒரே வழி இது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையின் அணுகுமுறை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள தனியார் கடன் வழங்குநர்கள், இதன் காரணமாக சர்வதேச மூலதன சந்தையில் இலங்கை குறித்த நம்பிக்கை சிதைவடையும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டில் பல மாற்றங்களையும் அபிவிருத்திகளையும் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டாலும், தனியார் கடன் வழங்குநர்களை அவர் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தனியார் கடன் வழங்குநர்கள் | Tamil Leader | We Lead the Nation