Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஐமசவுக்கு வந்த வேகத்தில் எம்ஜேபிக்கு புறப்பட்ட தயா ரத்நாயக்க

T

The Leader Desk

பிப்ரவரி 1, 2024 • 3:15 PM

ஐமசவுக்கு வந்த வேகத்தில் எம்ஜேபிக்கு புறப்பட்ட தயா ரத்நாயக்க   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜெனரல் தயா ரத்நாயக்க, இன்று (01) காலை பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு சென்று அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவை சந்தித்து கலந்துரையாடினார்.
  • இந்நிலையில், ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (01) காலை மவ்பிம ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு சென்று அக் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
  • பொரளையில் உள்ள தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

ஜெனரல் தயா ரத்நாயக்க, இன்று (01) காலை பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு சென்று அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜெனரல் தயா ரத்நாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தமை தொடர்பில்  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (31) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (01) காலை மவ்பிம ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு சென்று அக் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் அண்மையில் இணைந்து கொண்ட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவை இன்று சந்தித்தமை தொடர்பில் வெளியான செய்திகளை, ஐக்கிய மக்கள் சக்தியின் அதிபர் தேர்தல் செயற்பாட்டுப் பிரதானி சுஜீவ சேனசிங்க நிராகரித்துள்ளார்.

தயா ரத்நாயக்க தற்போது தாய்நாட்டு மக்கள் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளும் பொய்யானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் அண்மையில் இணைந்து கொண்ட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவை இன்று சந்தித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொரளையில் உள்ள தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தயா ரத்நாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தமை தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று விமர்சனமொன்றை முன்வைத்திருந்த நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

திலித் ஜயவீர மற்றும் தயா ரத்நாயக்கவுக்கிடையில் இன்றைய தினம் எந்தவொரு சந்திப்பும் நடைபெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருவருக்கிடையிலான சந்திப்பு தொடர்பில் பகிரப்பட்டு வரும் புகைப்படம், பழையது எனவும், இதுபோன்ற புகைப்படத்தை பயன்படுத்தி அரசியல் பிரசாரம் செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைவதால், இவ்வாறான போலிப் பிரசாரங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறலாம் எனவும் இது தொடர்பில் அவதானத்துடன் செயல்பட வேண்டுமெனவும் சுஜீவ சேனசிங்க வலியுறுத்தியுள்ளார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...