Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

தயா ரத்நாயக்க விவகாரம்: சூடுபிடித்துள்ள ஐமச உள்ளகப் பிரச்சினை

T

The Leader Desk

பிப்ரவரி 1, 2024 • 3:35 AM

தயா ரத்நாயக்க விவகாரம்: சூடுபிடித்துள்ள ஐமச உள்ளகப் பிரச்சினை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம், அந்த கட்சியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நேற்று வலியுறுத்தியுள்ளார்.
  • தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு வரவேற்க வேண்டிய நபர் அல்ல என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரகூட ஏற்றுக்கொண்டார்.
  • முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ், 2010ஆம் ஆண்டில் தான் சிறையில் அடைக்கப்பட்டதில், ரத்நாயக்கவுக்கு தொடர்பு இருந்ததாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம், அந்த கட்சியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நேற்று வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு பக்கபலமாக இருக்கும் பெரும்பாலான உயர் இராணுவ அதிகாரிகள் தயா ரத்நாயக்காவை அழைத்து, நியமனம் வழங்கப்பட்டதற்கு தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.

ரத்நாயக்கவை நீக்காவிடின் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என வினவியபோது, தான் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என்றும், நியமனத்திற்கு எதிராக செயற்பட உள்ளதாகவும் பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் புதிதாக வருபவர்களுக்கு இடமளிப்பது குறித்து கட்சியில் உள்ள மற்றவர்களும் விரக்தியடைந்துள்ளதாக ஃபீல்ட் மார்ஷல் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு வரவேற்க வேண்டிய நபர் அல்ல என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரகூட ஏற்றுக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ், 2010ஆம் ஆண்டில் தான் சிறையில் அடைக்கப்பட்டதில், ரத்நாயக்கவுக்கு தொடர்பு இருந்ததாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

“ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, கபீர் ஹாசிம் உள்ளிட்ட கட்சியில் உள்ள வேறு சிலரும் கட்சிக்கு ஆட்களை ஏற்றுக்கொள்வதற்கான கட்சித் தலைவரின் தீர்மானத்தால் தாங்களும் கலக்கமடைந்துள்ளதாக என்னிடம் தெரிவித்திருந்தனர்.

“கட்சித் தலைவருக்கு விருப்பமான எவரையும் கட்சிக்கு வரவேற்கும் வகையில் வெற்று காசோலை வழங்க வேண்டும் என்ற கட்சியின் செயற்குழு முடிவில் எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...