Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசின் உதவித்தொகை

T

The Leader Desk

ஜனவரி 31, 2024 • 1:31 PM

இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசின் உதவித்தொகை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
  • அதற்கமைய கடந்த வருடம் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதுடன் இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோடியே 15 இலட்சம் பெண்கள் மாதந்தோறும் ரூபாய் 1,000 உரிமைத் தொகை பெற்று வருகிறார்கள்.
  • அதன்படி, மேல்முறையீடு செய்துள்ளவர்களில் சில லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.
  • தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 19,487 இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எழுத்து அளவு:

முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

அதற்கமைய கடந்த வருடம் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதுடன் இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோடியே 15 இலட்சம் பெண்கள் மாதந்தோறும் ரூபாய் 1,000 உரிமைத் தொகை பெற்று வருகிறார்கள்.

இத்திட்டத்தில் பயன்பெற மேலும் பல லட்சம் பெண்கள் மேல்முறையீடு செய்து காத்திருக்கும் நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இத்திட்டத்தை மேலும் விரிவு படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, மேல்முறையீடு செய்துள்ளவர்களில் சில லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.

தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 19,487 இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்தக் குடும்பத்துப் பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் வகையில் அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

பெப்ரவரி மாதமே அவர்களுக்கான உரிமைத் தொகை வங்கியில் வரவு வைக்கப்படும் என்றும்  தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதம் ஏற்பட்டால் மார்ச் முதல், முகாம்களில் வசிக்கும் குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...