Tamil Leader News
முக்கியம்
புதிய பாதுகாப்புச் சட்டமூலங்களால் GSP+ சலுகை ஆபத்தில்?●சாஃப் கிண்ணக் கால்பந்து: இலங்கை - பூடான் போட்டி 2-2 என சமநிலையில் நிறைவு!●மான் தாக்கியதில் கைதி உயிரிழப்பு!●உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்; இன்று விசாரணை மீள ஆரம்பம்!●அநுராதபுர அபிவிருத்தி வர்த்தமானியும் இந்திய முதலீடும்: உண்மை நிலை என்ன?●சீனாவின் 'சினொபெக்' எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கைவிட பரிந்துரை!●மன நலத்துக்கு AIஐ நாடும் இளையோர்: இது தீர்வா அல்லது ஆபத்தா?●இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!●மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இலக்கான சுரேஷ் சாலேயை கிழக்கு ஆளுநராக நியமிக்க கோரிக்கை

T

The Leader Desk

டிசம்பர் 12, 2023 • 1:08 PM

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இலக்கான சுரேஷ் சாலேயை கிழக்கு  ஆளுநராக நியமிக்க கோரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விக்கிரமசிங்கவை காத்தான்குடியைப் பிரதான தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்ற வடகிழக்கு முஸ்லிம் பேரவை கோரியுள்ளது.
  • இராணுவ அதிகாரிகள் ஆளுநர்களாகப் பதவி வகித்த காலங்களில் எந்த இனமும் நிர்வாக ரீதியாகப் பாதிக்கப்பட்டது எனப் பதிவுகளைக் காண முடியவில்லை.
  • உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பந்தமான சதித் திட்டத்தை அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மேல் சுமத்தி 'சனல் 4'ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. (மாலைமுரசு).
எழுத்து அளவு:

விக்கிரமசிங்கவை காத்தான்குடியைப் பிரதான தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்ற வடகிழக்கு முஸ்லிம் பேரவை கோரியுள்ளது.

இப்பேரவையின் பணிப்பாளர் ஜெ.எல்.எம். ஷாஜகான் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-

“கிழக்கு மாகாணம் சிக்கலான இனத்துவக் கட்டமைப்பைக் கொண்ட மாகாணம் என்பதை தாங்கள் முழுமையாக அறிவீர்கள். கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்படுகின்ற தமிழ் ஆளுநரை முஸ்லிம்கள் எதிர்ப்பதும் முஸ்லிம் ஆளுநரை தமிழர்கள் எதிர்ப்பதும், சிங்கள ஆளுநரை தமிழ் பேசும் இரு சமூகத்தினரும் எதிர்ப்பதும் கிழக்கின் நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு நடத்துவதில் பாரிய பின்னடைவுகளை இதுவரையில் ஏற்படுத்தியுள்ளன.

“ஆனால், கிழக்கில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் இதுவரையில் ஸ்ரீ லங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளே மிகச் சிறப்பாகக் கடமைகளைச் செய்துள்ளனர் என்று மக்களிடையே பதிவாகியுள்ளது. இராணுவ அதிகாரிகள் ஆளுநர்களாகப் பதவி வகித்த காலங்களில் எந்த இனமும் நிர்வாக ரீதியாகப் பாதிக்கப்பட்டது எனப் பதிவுகளைக் காண முடியவில்லை.

“ஆகவே, எதிர்காலத்தில் கிழக்குக்கு நியமிக்கப்பட இருக்கும் ஆளுநரை மூன்று இனங்களும் விரும்புகின்ற வகையில், எந்த இனத்தையும் பாதிக்காத முறையில் நீங்கள் நியமிக்க வேண்டும்.

“இப்பதவிக்கு மிகப் பொருத்தமானவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே. இவரை நியமிப்பதன் மூலம் கிழக்கின் சுபீட்சத்துக்கு ஆவன செய்யுறுமாறு வேண்டிக்கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பந்தமான சதித் திட்டத்தை அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மேல் சுமத்தி 'சனல் 4'ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

(மாலைமுரசு)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இலக்கான சுரேஷ் சாலேயை கிழக்கு ஆளுநராக நியமிக்க கோரிக்கை | Tamil Leader | We Lead the Nation