Tamil Leader News
முக்கியம்
புதிய பாதுகாப்புச் சட்டமூலங்களால் GSP+ சலுகை ஆபத்தில்?●சாஃப் கிண்ணக் கால்பந்து: இலங்கை - பூடான் போட்டி 2-2 என சமநிலையில் நிறைவு!●மான் தாக்கியதில் கைதி உயிரிழப்பு!●உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்; இன்று விசாரணை மீள ஆரம்பம்!●அநுராதபுர அபிவிருத்தி வர்த்தமானியும் இந்திய முதலீடும்: உண்மை நிலை என்ன?●சீனாவின் 'சினொபெக்' எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கைவிட பரிந்துரை!●மன நலத்துக்கு AIஐ நாடும் இளையோர்: இது தீர்வா அல்லது ஆபத்தா?●இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!●மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●
செய்திகள்

இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் இந்திய மீனவர்கள் மூவர் காயம்

T

The Leader Desk

டிசம்பர் 12, 2023 • 12:54 PM

இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் இந்திய மீனவர்கள் மூவர் காயம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதிக்கப்பட்ட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த சனிக்கிழமை இரவு எல்லை தாண்டி வந்து பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்களைக் கடற்படையினர் படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
  • இந்நிலையில், இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது 7 பேர் மீதுகடற்படையினர் தாக்கினர் எனவும் இதில் மூவர் மீது கடும் தாக்குதல் மேற்கோள்ளப்பட்டது எனவும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
  • இதையடுத்துப் பாதிக்கப்பட்ட 3 இந்திய மீனவர்களையும் வைத்தியசாலையில் சேர்த்து சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கோரிய நிலையில், அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
எழுத்து அளவு:

பாதிக்கப்பட்ட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணராஜ், செமநாதன், சிறிநாத் ஆகிய இந்திய மீனவர்களே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு எல்லை தாண்டி வந்து பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்களைக் கடற்படையினர் படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது 7 பேர் மீதுகடற்படையினர் தாக்கினர் எனவும் இதில் மூவர் மீது கடும் தாக்குதல் மேற்கோள்ளப்பட்டது எனவும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்துப் பாதிக்கப்பட்ட 3 இந்திய மீனவர்களையும் வைத்தியசாலையில் சேர்த்து சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கோரிய நிலையில், அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

காரைக்கால் பகுதி படகில் வந்த 13 பேரில் 7 பேர் மீதே கடற்படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படகின் உரிமையாளரின் முதுகில் அதிக காயங்களும், இன்னுமொரு மீனவருக்குத் தலையில் காயங்களும், மற்றைய மீனவருக்குக் கையில் காயங்களும் காணப்படுகின்றன.

இவ்வாறு காயமடைந்த மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற அதேநேரம் இந்திய மீனவர்கள் தாக்கினர் என்று தெரிவித்து 3 கடற்படையினரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

(மாலைமுரசு)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...