Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●
செய்திகள்

‘நான் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழத்துக்கு இடமளியேன்’

T

The Leader Desk

டிசம்பர் 7, 2023 • 6:16 AM

‘நான் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழத்துக்கு இடமளியேன்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
  • அண்மையில் மாவீரர் தினம் வடக்கு மற்றும் கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டது.
  • “நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காகவே 29 ஆயிரம் வீரர்கள் உயிர் நீத்தார்கள்.
எழுத்து அளவு:

நாடாளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் தமிழ் அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கமாட்டோம். அவர்களும் யுத்தக் களத்துக்கு செல்ல வேண்டும்.

“புத்த சாசனத்தை பாதுகாக்க வேண்டுமாயின் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த தொல்பொருள் சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன.

“வெடுக்குநாறி பகுதியில் பௌத்த சின்னங்களை அழித்து அதன் மீது பிற மதத்தின் சின்னங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மத்திய அரசுக்குள் இருக்கும் நிலையில் பௌத்த சின்னங்கள் அங்கு அழிக்கப்படுகிறது என்றால் தனி இராச்சிய அதிகராத்தை வழங்கினால் என்ன நேரிடும் என்பதை சிந்திக்க வேண்டும்.

“இதனால் தான் ஒற்றையாட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அண்மையில் மாவீரர் தினம் வடக்கு மற்றும் கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டது.

“நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காகவே 29 ஆயிரம் வீரர்கள் உயிர் நீத்தார்கள். பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரம் பயங்கரவாதிகளை நினைவு கூர்வற்கு அல்ல என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

“மாவீரர் தினத்தன்று யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடையை சிறுவர்களுக்கு அணிவித்து அவர்களின் கழுத்தில் சயனைட் மாதிரியிலான குப்பிகளை அணிவித்து அவர்களை மாவீரர் தின நிகழ்வுகளில் பங்குப்பற்ற செய்துள்ளார்கள். இவ்வாறான செயற்பாடுகளையிட்டு வெட்கமடைய வேண்டும்.

“சிறு பிள்ளைகளின் மனங்களில் சிங்களவர்கள் தொடர்பில் வைராக்கியம் விதைக்கப்படுகிறது. தனி ஈழ இராச்சியத்துக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை. சிங்கள மக்கள் எவரும் இடமளிக்கமாட்டார்கள்”  என தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘நான் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழத்துக்கு இடமளியேன்’ | Tamil Leader | We Lead the Nation