Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●
செய்திகள்

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இலங்கை வீரரின் உடல் மீட்பு

T

The Leader Desk

டிசம்பர் 7, 2023 • 4:18 AM

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இலங்கை வீரரின் உடல் மீட்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிறப்புப் படையின் தளபதியாக பணியாற்றிய போது ரஷ்ய தாக்குதல்களில் கொல்லப்பட்ட அதிகாரி ரனிஷ் ஹேவகேயின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
  • நேற்று (06) சடலம் மீட்கப்பட்டதாக உக்ரேனிய சர்வதேச லீக்கின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  • யுத்த காலத்தில் பீரங்கித் தாக்குதலுக்கு இலக்கான ரனிஷை, அவரது இரண்டாம்நிலை அதிகாரியான இலங்கையின் கொமாண்டோ படையணியில் பணியாற்றிய நிலையில் உக்ரேன் இராணுவத்தில் சேவையில் இணைந்துகொண்ட கோப்ரல் எல்.கே.ஹதுருசிங்கவே சுமார் 15 கிலோமீற்றர் தூரம் வரை அழைத்து வந்துள்ளார்.
  • ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ராணுவ மோதல்கள் தொடங்கியதையடுத்து, வெளிநாட்டு வீரர்களுக்கு உக்ரேன் ஜனாதிபதி அளித்த வெளிப்படையான அழைப்பை ஏற்று ரனிஷ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டு இராணுவத்தில் சேர்ந்தார்.
எழுத்து அளவு:

சிறப்புப் படையின் தளபதியாக பணியாற்றிய போது ரஷ்ய தாக்குதல்களில் கொல்லப்பட்ட அதிகாரி ரனிஷ் ஹேவகேயின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (06) சடலம் மீட்கப்பட்டதாக உக்ரேனிய சர்வதேச லீக்கின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் பீரங்கித் தாக்குதலுக்கு இலக்கான ரனிஷை, அவரது இரண்டாம்நிலை அதிகாரியான இலங்கையின் கொமாண்டோ படையணியில் பணியாற்றிய நிலையில் உக்ரேன் இராணுவத்தில் சேவையில் இணைந்துகொண்ட கோப்ரல் எல்.கே.ஹதுருசிங்கவே சுமார் 15 கிலோமீற்றர் தூரம் வரை அழைத்து வந்துள்ளார்.

நேற்று உக்ரைன் ,ராணுவ வீரர்கள் சுமார் எட்டு கிலோமீற்றர் தூரம் சென்று, கெப்டன் ரனிஷ் ஹேவகே அதிகாரியின் உடலை பத்திரமாகக் கொண்டு வந்தனர்.

இத்தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கை கடற்படையில் பெடி ஒஷியர் பதவிநிலையை வகித்து, பின்னர் அதிலிருந்து விலகி, உக்ரேன் அரசாங்க இராணுவத்தில் இணைந்துகொண்ட எம்.எம்.பிரியந்தகே மற்றும் இராணுவத்தின் சிங்க ரெஜிமெண்டில் கடமையாற்றி நிலையில் விலகி, உக்ரேன் இராணுவத்தில் இணைந்து சேவையாற்றிய ரொட்னி ஜயசிங்க ஆகியோரின் சடலங்களை நேற்று வரை கொண்டு வர முடியவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய இராணுவத்தின் சர்வதேச லீக்கின் அமெரிக்க, கனேடிய மற்றும் பிற வெளிநாட்டுப் படைகளுக்கு தலைமை தாங்கிய கேப்டன் ரனிஷ் ஹேவகேயின் இறுதிச் சடங்குகள், உக்ரேன் அரசாங்கத்தின் இராணுவ மரியாதையுடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ராணுவ மோதல்கள் தொடங்கியதையடுத்து, வெளிநாட்டு வீரர்களுக்கு உக்ரேன் ஜனாதிபதி அளித்த வெளிப்படையான அழைப்பை ஏற்று ரனிஷ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டு இராணுவத்தில் சேர்ந்தார்.

உக்ரேனிய இராணுவத்தின் சர்வதேச லீக்கில் கேப்டன் ரனிஷ் ஹேவகே சிப்பாயாக சேர்ந்து பணியாற்றிய நிலையில், போர் முனையில் அவர் ஒன்பது முறை காயமடைந்துள்ளார். போர் முனையில் அவரது திறமையைப் பாராட்டி, அந்நாட்டு ஜனாதிபதி அவரை அதிகாரத்திற்கு நியமித்து முதல் சிறப்புப் படைத் தளபதியாக அமர்த்தினார்.

அவரது மார்பு, தலை மற்றும் உடலின் பல பாகங்களிலிருந்து, பீரங்கி குண்டுகள் மற்றும் துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உக்ரேனிய நாட்டின் ஜனாதிபதியிடமிருந்து ஐந்து விருதுகளைப் பெற்ற இராணுவ அதிகாரியாக அவர் திகழ்கிறார் என்று, சர்வதேச லீக்கின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...