Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●
செய்திகள்

‘புலிகளை மீளுருவாக்கம் செய்யவும் மாட்டேன்: ராஜபக்ஷர்களைப் பாதுகாக்கவும் மாட்டேன்’

T

The Leader Desk

டிசம்பர் 7, 2023 • 3:31 AM

‘புலிகளை மீளுருவாக்கம் செய்யவும் மாட்டேன்: ராஜபக்ஷர்களைப் பாதுகாக்கவும் மாட்டேன்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேவையும் எனக்கு இல்லை” என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
  • சிலரின் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களுக்கு என்னால் அவர்களின் பாணியில் பதிலளிக்கமுடியாது.
  • மாவீரர் தின நிகழ்வு தொடர்பிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்தும், ராஜபக்ஷ தரப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எதிராக எதிரணியினர் முன்வைத்து வரும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எழுத்து அளவு:

தேவையும் எனக்கு இல்லை” என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாவீரர் தின நிகழ்வு தொடர்பிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்தும், ராஜபக்ஷ தரப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எதிராக எதிரணியினர் முன்வைத்து வரும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போரில் மரணித்த தமது சொந்தங்களைத் தமிழர்கள் நினைவேந்தும் போது அதற்குப் புலி முத்திரை குத்த முடியாது. அதேவேளை, நினைவேந்தல் என்ற பெயரில் நீதிமன்றக் கட்டளைகளை மீறிப் புலிகளைக் கொண்டாடுபவர்களைக் கைது செய்யாமல் விடவும் முடியாது.

“இதற்குள் அரசியல் ஆதாயம் தேடவும் சிலர் முற்படுகின்றார்கள். புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. சிலரின் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களுக்கு என்னால் அவர்களின் பாணியில் பதிலளிக்கமுடியாது.

“இது இவ்வாறிருக்க, ஜனாதிபதிப் பதவியை நான் தக்க வைப்பதற்காக நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான ராஜபக்ஷக்களைப் பாதுகாத்து வருகின்றேன் என்ற கருத்தையும் சிலர் முன்வைத்து வருகின்றனர்.

“ராஜபக்ஷர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. அவர்கள் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் அதற்குரிய தண்டனையை வழங்கும். உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை வைத்துக்கொண்டு என் மீது பழிசுமத்த வேண்டாம்.

“ராஜபக்ஷர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டுமென விரும்புபவர்கள் நீதிமன்றத்தை நாடலாம். என்னை விமர்சிப்பதால் எவருக்கும் எந்தப் பயனும் இல்லை” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘புலிகளை மீளுருவாக்கம் செய்யவும் மாட்டேன்: ராஜபக்ஷர்களைப் பாதுகாக்கவும் மாட்டேன்’ | Tamil Leader | We Lead the Nation