Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●
செய்திகள்

‘பிரபாகரனுக்கு நிகராக எவருமே வர முடியாது’

T

The Leader Desk

டிசம்பர் 6, 2023 • 3:44 AM

‘பிரபாகரனுக்கு நிகராக எவருமே வர முடியாது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இராணுவ அதிகாரியும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
  • இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசுவதாக கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி வெளியான வீடியோ போலியானது.
  • இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களின் ஒரு குழு திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளது என்பது நூறு வீதம் உண்மை.
  • “2019ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் தலைவர் பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் உயிரிழந்து விட்டனர், அவர்களை வைத்து இனி எவரும் அரசியல் செய்ய முடியாது.
எழுத்து அளவு:

இராணுவ அதிகாரியும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மாவீரர் தினமன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதல்வி பேசுவதாக வெளியான காணொளி தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது,

“தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசுவதாக கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி வெளியான வீடியோ போலியானது.

“அந்தப் போலி காணொளிக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கும் என்று என்னால் கூற முடியாது. அதேவேளை, தொடர்பு இல்லை என்றும் என்னால் கூற முடியாது. இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களின் ஒரு குழு திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளது என்பது நூறு வீதம் உண்மை.

“2019ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் தலைவர் பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் உயிரிழந்து விட்டனர், அவர்களை வைத்து இனி எவரும் அரசியல் செய்ய முடியாது. அது அவர்களை அவமானப்படுத்தும் செயல்.

“தலைவர் பிரபாகரனின் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அவர் நேர்மையான ஒரு தலைவர், இறுதி வரைப் போராடிய ஒரு தலைவர்" எனக் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...