Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●
செய்திகள்

குர்ஆனை அவமதித்த ஞானசாரர்: சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடிய நீதிமன்றம்

T

The Leader Desk

டிசம்பர் 4, 2023 • 1:20 PM

குர்ஆனை அவமதித்த ஞானசாரர்: சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடிய நீதிமன்றம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
  • முஸ்லீம் மதத்தை அவமதிக்கும் வகையிலான கருத்தொன்றை கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வெளியிட்டிருந்தார்.
  • ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, அவர் இவ்வாறாக கருத்து வெளியிட்டமை சர்ச்சைக்குள்ளாகியிருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் அதற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.
  • இதனை அடிப்படையாக கொண்டு, இந்த மனு மீதான அடுத்த விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி மேற்கொள்ளப்படுமென அவர் உத்தரவிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் மதத்தை அவமதிக்கும் வகையிலான கருத்தொன்றை கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வெளியிட்டிருந்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, அவர் இவ்வாறாக கருத்து வெளியிட்டமை சர்ச்சைக்குள்ளாகியிருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் அதற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டதுடன், மனு மீதான விசாரணைகளையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று மீண்டும் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகே தெரிவித்துள்ளார்.

இதனை அடிப்படையாக கொண்டு, இந்த மனு மீதான அடுத்த விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி மேற்கொள்ளப்படுமென அவர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

குர்ஆனை அவமதித்த ஞானசாரர்: சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடிய நீதிமன்றம் | Tamil Leader | We Lead the Nation