Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●
செய்திகள்

‘சமூகப் புரட்சிக்கு எல்லாம் தயார்’

T

The Leader Desk

டிசம்பர் 4, 2023 • 4:42 AM

‘சமூகப் புரட்சிக்கு எல்லாம் தயார்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விரும்புகின்றனர்” என்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (ஏகேடி) தெரிவித்தார்.
  • ஒருபுறம், ஆட்சியாளர்கள் இனி வழக்கம் போல் ஆட்சி செய்ய முடியாது.
  • தேசிய மக்கள் சக்தியின் தெஹிவளை பேரவையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

விரும்புகின்றனர்” என்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (ஏகேடி) தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தெஹிவளை பேரவையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

“அப்போது ரணில் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவானவர் என்ற கருத்து நிலவியது. மஹிந்த ஒரு தேசபக்தராகக் கருதப்பட்டார். இருவரும் இரண்டு மேடைகளில் ஏறி, வாள்களை உருவி, போருக்கு அழைத்தனர். ஆனால் அவர்களின் வாள் காகிதம் என்பது மக்களுக்குத் தெரியாது. அதன் காரணமாக அடிமட்ட மக்கள் பிரிந்து குவிந்தனர். இப்போது இருவரும் ஒரே மேடையில் இருக்கிறார்கள். அவருக்காக இவர் நிற்கிறார். இவருக்காக அவர் நிற்கிறார். ஆனால் அத்தகைய அரசுகள் சமூகப் புரட்சிகளைக் கொண்டுவருவதில்லை. மக்கள் இப்போது விரும்புவது ஆட்சி மாற்றத்தை அல்ல சமூக மாற்றத்தையே.

“பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு சமூக மாற்றம் ஏற்படுகிறது. அதற்கான சூழ்நிலைகள் உருவாக வேண்டும். ஒருபுறம், ஆட்சியாளர்கள் இனி வழக்கம் போல் ஆட்சி செய்ய முடியாது. இப்போது அது நடந்துள்ளது. மறுபுறம், மக்கள் வழக்கம் போல் வாழ முடியாது. இப்போது அதுவும் நடந்துள்ளது. எனவே, சமூக மாற்றத்திற்கான சூழ்நிலை அனைத்துத் திசைகளிலிருந்தும் தயாராக உள்ளது. எனவே, அத்தகைய சமூக மாற்றத்திற்கு தேசிய மக்கள் படை தயாராக உள்ளது.

“மக்கள் வாழ வழியில்லை. வேலை இல்லை. வேலை இருப்பவனுக்கு நல்ல சம்பளம் இல்லை. தற்போதைய சம்பளத்தில் வாழ வழியில்லை. விவசாயம் செய்ய வழியில்லை. அதை தொழிலாக மாற்ற வழியில்லை. தெருவில் ஒரு குழந்தை கூட நடக்க முடியாது. அவர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை. மனிதர்கள் மனித உறவுகளிலிருந்து விலகி சமூகத்தை ஈரம் இல்லாத சமூகமாக மாற்றியுள்ளனர். எனவே இதனை மாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு இன்றைய சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வந்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த தொகுதி மாநாட்டில் தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சமன்மலி குணசிங்க, சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, மௌலவி முனீர் முலஃபர் உட்பட பல பேச்சாளர்கள் கலந்துகொண்டு பேசினர். இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘சமூகப் புரட்சிக்கு எல்லாம் தயார்’ | Tamil Leader | We Lead the Nation