Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஒட்டகத்தில் இருந்து பரவும் மெர்ஸ் கொரோனா - இளைஞன் பாதிப்பு!

T

The Leader Desk

ஜூலை 26, 2023 • 3:52 AM

ஒட்டகத்தில் இருந்து பரவும் மெர்ஸ் கொரோனா - இளைஞன் பாதிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வைரஸ் (MERS-CoV) பரவி வருவதை உறுதி செய்துள்ளது.
  • முதல் முறையாக அல் ஐன் நகரில் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 28 வயது நபர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
  • அதனைத் தொடர்ந்து அந்த நபருடன் தொடர்பில் இருந்த 108 பேரை அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் சோதித்துள்ளனர்.
  • மெர்ஸ் கோரோனா வைரஸ் ஒட்டகங்கள் மூலம் பரவுகிறது என்று கருதப்படும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள நபர் ஒட்டங்கங்களுடன் தொடர்பு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
எழுத்து அளவு:

வைரஸ் (MERS-CoV) பரவி வருவதை உறுதி செய்துள்ளது. முதல் முறையாக அல் ஐன் நகரில் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 28 வயது நபர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த நபருடன் தொடர்பில் இருந்த 108 பேரை அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் சோதித்துள்ளனர். ஆனால் இதுவரை இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் எதுவும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் தற்போதைய நிலை குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

மெர்ஸ் கோரோனா வைரஸ் ஒட்டகங்கள் மூலம் பரவுகிறது என்று கருதப்படும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள நபர் ஒட்டங்கங்களுடன் தொடர்பு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

மெர்ஸ் கொரோனா (MERS-CoV) என்றால் என்ன?

மத்திய கிழக்கு நாடுகளில் பரவத் தொடங்கியதால் மெர்ஸ் கொரோனா வைரஸ் Middle East Respiratory Syndrome Coronavirus (MERS-CoV) என்று அழைக்கப்படுகிறது. இது முதன்முதலில் சவுதி அரேபியாவில் 2012 இல் கண்டறியப்பட்டது.

அல்ஜீரியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஈரான், இத்தாலி, ஜோர்டான், குவைத், லெபனான், மலேசியா, நெதர்லாந்து, ஓமன், பிலிப்பைன்ஸ், கத்தார், கொரியா குடியரசு, பிரிட்டன், சவுதி அரேபியா,மற்றும் ஏமன் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள மக்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை 936 இறப்புகளுடன் மெர்ஸ் கோரோனாவால் ஏற்பட்டுள்ளன. மொத்தம் 2,605 பேர் மெர்ஸ் கோரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே பரவக்கூடிய ஒரு ஜூடோனிக் வைரஸ் ஆகும்.

சவூதி அரேபியாவில் உள்ள மக்கள் ஒட்டகங்களுடன் பாதுகாப்பற்ற முறையில் தொடர்பு கொள்வதால் இந்த வைரஸ் பாதிப்புக்உக ஆளாகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். சில சந்தர்ப்பங்களில் நிமோனியாவும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...