Tamil Leader News
முக்கியம்
190 பில்லியன் ரூபா இறக்குமதி மோசடி: வங்கி அதிகாரிகளின் தொடர்புகள் குறித்தும் தீவிர விசாரணை!●இலங்கையில் 4 இலட்சம் TikTok காணொளிகள் நீக்கம்: டிஜிட்டல் நெருக்கடியின் எச்சரிக்கை!●'தமிழர்களின் பிரச்சினைகளை மோடியிடம் கூறுவேன்': சீதாராமன்  உறுதியளிப்பு!●எழுதப் படிக்கத் தெரியாத ஆபிரிக்கப் பாட்டிகள் சூரிய மின்சாரப் பொறியியலாளர்களாக மாறிய விந்தை!●ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நெருக்கடியில்: 3.7 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை இரத்துச் செய்யப் பரிந்துரை!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் கடுமையான பரிசீலனைக்கு!●இந்திய சினிமாவையே தலைகீழாக மாற்றிய ‘ராமாயணம்’ உலகம் முழுவதும் திரைக்கு!●ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை மீண்டும் அதிகரிப்பு: வித்தியாசம் ரூ. 25!●நாட்டை விட்டு இளைஞர்கள் வெளியேறும் அவலம்!●தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!●
செய்திகள்

இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

T

The Leader Desk

ஏப்ரல் 7, 2023 • 8:36 AM

இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன் போது இலங்கையின் அபிவிருத்தி கொள்கை முன்னெடுப்புக்களுக்கு உலக வங்கி வழங்கும் ஒத்துழைப்பிற்கு பாராட்டுத் தெரிவித்த சாகல ரத்நாயக்க இந்த வேலைத்திட்டத்தை சாத்தியமாக்கிக் கொள்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
  • உலக வங்கியின் இந்நாட்டுக்கான முகாமையாளர் சியோ கன்தா உள்ளிட்ட உலக வங்கி பிரிதிநிதிகளும் பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர் .எச் .எஸ்.
  • சமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தனர்.
எழுத்து அளவு:

தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே உலக வங்கி பிரதிநிதிகள் மேற்கண்டவாறு பாராட்டு தெரிவித்திருந்தனர்.

பாராளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகத்தை (Parliamentary budget office) நிறுவுதல், அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்தல், நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் முறைமை, சமூகப் பதிவு (Social registry) போன்ற இலங்கையின் அபிவிருத்தி கொள்கைக்கான செயற்பாட்டுத் திட்டத்தினை முழுமையாக்குவதற்கு அவசியமான எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கு அவசியமான கால எல்லை என்பன தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது இலங்கையின் அபிவிருத்தி கொள்கை முன்னெடுப்புக்களுக்கு உலக வங்கி வழங்கும் ஒத்துழைப்பிற்கு பாராட்டுத் தெரிவித்த சாகல ரத்நாயக்க இந்த வேலைத்திட்டத்தை சாத்தியமாக்கிக் கொள்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

உலக வங்கியின் இந்நாட்டுக்கான முகாமையாளர் சியோ கன்தா உள்ளிட்ட உலக வங்கி பிரிதிநிதிகளும் பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர் .எச் .எஸ். சமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...