Tamil Leader News
முக்கியம்
நாட்டை விட்டு இளைஞர்கள் வெளியேறும் அவலம்!●தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!●தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●
செய்திகள்

தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!

Menaka

Menaka

நவம்பர் 5, 2026 • 9:41 AM

தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சர்வதேச கடல் எல்லையில் விசேட நடவடிக்கை இலங்கைக்கு தெற்கு திசையிலுள்ள சர்வதேச கடல் வலயத்தில் புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சந்தேகத்துக்கிடமான உள்நாட்டு மீன்பிடிப் படகொன்றுகடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
  • நவம்பர் 04 ஆம் திகதி இடம்பெற்ற இந்த நடவடிக்கையின் போது, படகிற்குள் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 உறைப் பைகள் கண்டறியப்பட்டதுடன், அதிலிருந்த 5 உள்நாட்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • குறித்த படகு மற்றும் சந்தேகநபர்களைச் சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக இன்று (05) காலை திகோவிற்ற மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • கிலோ கையிருப்பும் 3 பில்லியன் சந்தைப் பெறுமதியும் திக்கோவிற்ற துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட சோதனைகளின் போது, குறித்த உரைகளுக்குள் 100 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 50 கிலோகிராமிற்கும் அதிகமான 'ஐஸ்'போதைப்பொருட்கள் காணப்படுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

சர்வதேச கடல் எல்லையில் விசேட நடவடிக்கை

இலங்கைக்கு தெற்கு திசையிலுள்ள சர்வதேச கடல் வலயத்தில் புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சந்தேகத்துக்கிடமான உள்நாட்டு மீன்பிடிப் படகொன்றுகடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 04 ஆம் திகதி இடம்பெற்ற இந்த நடவடிக்கையின் போது, படகிற்குள் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 உறைப் பைகள் கண்டறியப்பட்டதுடன், அதிலிருந்த 5 உள்நாட்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த படகு மற்றும் சந்தேகநபர்களைச் சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக இன்று (05) காலை திகோவிற்ற மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

150 கிலோ கையிருப்பும் 3 பில்லியன் சந்தைப் பெறுமதியும்

திக்கோவிற்ற துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட சோதனைகளின் போது, குறித்த உரைகளுக்குள் 100 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 50 கிலோகிராமிற்கும் அதிகமான 'ஐஸ்'போதைப்பொருட்கள் காணப்படுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தைப் பார்வையிட வருகை தந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், இந்த போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி  3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமானது எனத் தெரிவித்தார்.

கடல் வழிகள் ஊடாக நாட்டிற்குள் இடம்பெறும் போதைப்பொருள் விநியோகத்தை முற்றாக முடக்குவதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என்றும் பிரதி அமைச்சர் அங்கு வலியுறுத்தினார்.

கடல் பாதுகாப்பு வலையமைப்பும் நடவடிக்கைத் தரவுகளும்

2025ஆம் ஆண்டில் கடற்படையினரால் மாத்திரம் 75 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 'ரட்டம எக்கட்ட' (முழு நாடும் ஒன்றாக) தேசிய நடவடிக்கையின் கீழ் கடற்படையின் பங்களிப்புடன் சட்டத்தின் வலையில் வீழ்த்தப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 109 பில்லியன் ரூபாவாகும்.

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 69 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கையிருப்புகள் கடற்படை நடவடிக்கைகளின் மூலம் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த நடவடிக்கைகளின் ஊடாக இதுவரை 314,200க்கும் அதிகமான கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 1,050 பேர் பிரதான நெட்வொர்க் உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடல் வழி போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 63 படகுகளைக் கடற்படையினர் இதுவரை கைப்பற்றியுள்ளதுடன், அதில் 11 படகுகளும் 353 சந்தேகநபர்களும் அடங்குகின்றனர்.

கடத்தல்காரர்களின் எதிர்காலச் செயல்பாடுகள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவிப்பதற்காக '1818' என்ற குறுஞ்செய்தி/தொலைபேசி இலக்கம் பொதுமக்களுக்காகச் செயல்பாட்டில் உள்ளது.

மேலதிகத் தகவல் மூல இணைப்புகள்:

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...