Tamil Leader News
முக்கியம்
அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●புதிய 2 பாதுகாப்புச் சட்டங்களால் GSP+ சலுகைக்கும் பாரிய அச்சுறுத்தல் - சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை!●குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை - விமலுடன் இணையும் அமைச்சர்கள்!

T

The Leader Desk

ஏப்ரல் 3, 2022 • 2:30 AM

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை -  விமலுடன் இணையும் அமைச்சர்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்கள் மற்றும் பல இராஜாங்க அமைச்சர்கள் கடந்த சில நாட்களாக விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருடன் இரகசிய சந்திப்புகளை நடத்தி வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
  • தேசிய ரீதியில் 59.09 சதவீத வாக்குகளைப்பெற்ற அக்கட்சிக்கு 17 போனஸ் ஆசனங்கள் உட்பட 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.
  • அதன்பின்னர் முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள், அரவிந்தகுமார், டயானா போன்றவர்களும் அரசுக்கு ஆதரவை வெளிப்படுத்தினர்.
  • இதனால் நாடாளுமன்றத்தில் 160 ஆசனங்கள் அரச வகம் இருந்தன.
எழுத்து அளவு:

அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்கள் மற்றும் பல இராஜாங்க அமைச்சர்கள் கடந்த சில நாட்களாக விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருடன் இரகசிய சந்திப்புகளை நடத்தி வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கச்செய்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தனிப்பெரும்பான்மையை இல்லாதொழிக்க தேவையான எண்ணிக்கையை விட அதிகமான உறுப்பினர்களை அரசாங்கத்திற்கு எதிராக அணி திரட்டி வருவதாக தெரிவித்த அவர், சரியான நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.அந்தத் தேர்தலில் மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

இன்று மக்கள் எதிர்நோக்கும் கடும் சிரமங்களினால் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்காமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2020 ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவானது, கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்திலேயே எதிர்கொண்டது. தேசிய ரீதியில் 59.09 சதவீத வாக்குகளைப்பெற்ற அக்கட்சிக்கு 17 போனஸ் ஆசனங்கள் உட்பட 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.

பங்காளிக்கட்சிகளின் ஆதரவு கிட்டியது. அதன்பின்னர் முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள், அரவிந்தகுமார், டயானா போன்றவர்களும் அரசுக்கு ஆதரவை வெளிப்படுத்தினர். இதனால் நாடாளுமன்றத்தில் 160 ஆசனங்கள் அரச வகம் இருந்தன.

அதாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மையை (150) விஞ்சிய ஆதரவு. எனினும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையால் அரசு விசேட பெரும்பான்மையை இழந்துவிட்டது. சுதந்திரக்கட்சியும் காலைவாரும் நிலையிலேயே உள்ளது.

சுசில் பிரேமஜயந்த, விஜயதாச ராஜபக்ச ,சந்திம வீரக்கொடி, விதுர விக்ரமநாயக்க, பிரேமநாத் தொலவத்த ஆகியோருக்கும் அரசுடன் நல்லுறவு இல்லை. சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்து இ.தொ.காவும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. எனவே, மொட்டு கட்சிக்கு ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான சாதாரண பெரும்பான்மை ( 113 ஆசனங்கள்) ஆதரவு கூட ஊசலாடுகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே விமல் தரப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...