Tamil Leader News
முக்கியம்
அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●புதிய 2 பாதுகாப்புச் சட்டங்களால் GSP+ சலுகைக்கும் பாரிய அச்சுறுத்தல் - சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை!●குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●
செய்திகள்

சமூக ஊடக செயற்பாட்டாளர் அனுருத்தவின் கைதுக்கு பொலிஸார் விளக்கம்!

T

The Leader Desk

ஏப்ரல் 2, 2022 • 4:11 PM

சமூக ஊடக செயற்பாட்டாளர் அனுருத்தவின் கைதுக்கு பொலிஸார் விளக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அனுருத்த பண்டார, அரசாங்கத்துக்கு எதிரான முகநூல் பக்கத்தின் நிர்வாகியாக செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில், மோதரை பொலிஸில் இருந்து சென்றதாக கூறிக்கொள்ளும் குழுவினால் நேற்று இரவு அவர் கடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
  • அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவர் தண்டனை சட்ட கோவையின் 120ஆம் இலக்க பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • இதேவேளை, சமூக ஊடக செயற்பாட்டாளரான திசர அனுருத்த பண்டார, சட்டத்தரணிகளின் உதவியை பெறுவதற்கு இடமளிக்குமாறும், மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
  • “சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வெளியிட்டுள்ள செய்திகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதற்காக குறித்த 28 வயதுடைய இளம் சமூக செயற்பாட்டாளர் கம்பளை, எத்கல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

அனுருத்த பண்டார, அரசாங்கத்துக்கு எதிரான முகநூல் பக்கத்தின் நிர்வாகியாக செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில், மோதரை பொலிஸில் இருந்து சென்றதாக கூறிக்கொள்ளும் குழுவினால் நேற்று இரவு அவர் கடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

ஆனாலும் பின்னர் மோதரை பொலிஸ் நிலையத்தில் அவ்வாறான ஒருவர் இல்லை என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகியது.

 இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. 

இவ்வாறான சூழலில் தற்போது அவர் மோதர பொலிஸ் குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவர் தண்டனை சட்ட கோவையின் 120ஆம் இலக்க பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சமூக ஊடக செயற்பாட்டாளரான திசர அனுருத்த பண்டார, சட்டத்தரணிகளின் உதவியை பெறுவதற்கு இடமளிக்குமாறும், மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதனிடையே, அனுருத்த பண்டார கைதுசெய்யப்பட்டதற்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

“சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வெளியிட்டுள்ள செய்திகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதற்காக குறித்த  28 வயதுடைய இளம் சமூக செயற்பாட்டாளர் கம்பளை, எத்கல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்  தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...