Tamil Leader News
முக்கியம்
அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●புதிய 2 பாதுகாப்புச் சட்டங்களால் GSP+ சலுகைக்கும் பாரிய அச்சுறுத்தல் - சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை!●குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●
செய்திகள்

அரசின் உறுதிமொழிகள் ஆபத்தானவை - டெலோ

T

The Leader Desk

மார்ச் 29, 2022 • 5:00 AM

 அரசின் உறுதிமொழிகள் ஆபத்தானவை - டெலோ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நல்லிணக்க கோரிக்கைகளை கையாள்வதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரச தரப்பில் விசாரணையை ஆரம்பிக்க இருப்பதாக தெரிவிப்பது சர்வதேச விசாரணையை நீர்த்துப்போக வைக்கும் செயல் என டெலோ அமைப்பு தனது அறிக்கையின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது.
  • அரசு எதிர்கொண்டிருக்கும் சர்வதேச விசாரணை மற்றும் நீதி பொறிமுறையை நீர்த்துப்போக வைக்கும் நடவடிக்கையாக சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளமை ஆபத்தானவை என டெலோ அமைப்பின் அறிக்கையினூடாக சுரேந்திரன் குருசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பில் டெலோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அரசின் உள்ளக பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிக்கவைக்கக் கூடாது என்பதோடு சர்வதேச அழுத்தங்களை நீர்த்துப் போகவைக்கும் அரசின் நகர்விற்கு இடமளிக்க முடியாதென டெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க கோரிக்கைகளை கையாள்வதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு எதிர்கொண்டிருக்கும் சர்வதேச விசாரணை மற்றும் நீதி பொறிமுறையை நீர்த்துப்போக வைக்கும் நடவடிக்கையாக சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளமை ஆபத்தானவை என டெலோ அமைப்பின் அறிக்கையினூடாக சுரேந்திரன் குருசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரச தரப்பில் விசாரணையை ஆரம்பிக்க இருப்பதாக தெரிவிப்பது சர்வதேச விசாரணையை நீர்த்துப்போக வைக்கும் செயல் என டெலோ அமைப்பு தனது அறிக்கையின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கம் கடந்த காலங்களில் எதிர்நோக்கிய சர்வதேச மற்றும் உள்ளக நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்காக பேரினவாத அரசுகள் தமிழ் மக்களை பயன்படுத்தி வந்த வரலாறுகளையும் கருத்திற்கொண்டு கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், சந்தர்ப்பங்களை சரியான முறையில் பக்குவமாக தமிழ் மக்கள் சார்ந்ததாக கையாள வேண்டும் என்பதே டெலோ அமைப்பின் நிலைப்பாடு என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசின் உறுதிமொழிகள் ஆபத்தானவை - டெலோ | Tamil Leader | We Lead the Nation