Tamil Leader News
முக்கியம்
அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●புதிய 2 பாதுகாப்புச் சட்டங்களால் GSP+ சலுகைக்கும் பாரிய அச்சுறுத்தல் - சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை!●குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●
செய்திகள்

புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடுகளை கோருவதால் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாதா? - வடக்கில் அரசுக்கு எதிராக

T

The Leader Desk

மார்ச் 28, 2022 • 6:17 PM

  புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடுகளை கோருவதால் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாதா? - வடக்கில் அரசுக்கு எதிராக

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது.
  • வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
  • இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
எழுத்து அளவு:

பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி, எமது இனத்தை அழிக்க பெற்ற ஆயுதங்களுக்கு தமிழர்கள் பொறுப்பாளிகளா, அன்று ஆயுதத்தால் அழித்தாய் இன்று பட்டினியால் அழிக்கிறாய் தமிழர் தேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர்கள் முதலிடுவர் போன்ற கோசங்கள் எழுப்பபட்டது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். “சமீபத்தில், வெளிநாடுகளில் வசிக்கும் பல அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக அரசாங்கம் தடை உத்தரவைப் பிறப்பித்தது. தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், புலம்பெயர்ந்தோரின் முதலீடுகளைப் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது” என்றார்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ராஜபக்ஷ அரசுக்கு தேசிய பாதுகாப்பில் இப்போது பிரச்சினை இல்லை என்பதையே காட்டுகிறது” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...