Tamil Leader News
முக்கியம்
அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●புதிய 2 பாதுகாப்புச் சட்டங்களால் GSP+ சலுகைக்கும் பாரிய அச்சுறுத்தல் - சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை!●குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●
செய்திகள்

இந்தியா, இலங்கையிடம் விடுத்துள்ள கோரிக்கை!

T

The Leader Desk

மார்ச் 28, 2022 • 3:36 AM

இந்தியா, இலங்கையிடம் விடுத்துள்ள கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய நாடுகளின் சமுத்திர சட்டத்தின் சில முக்கிய சரத்துகள் மீனவர் நேயமானதென தெரிவித்த இந்தியா, மீனவர் விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் கையாளுமாறும் இலங்கையிடம் தெரிவித்துள்ளது.
  • எனினும் இந்தியாவின் கோரிக்கை தொடர்பில் இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஐ.ரத்நாயக்கவிடம் வினவிய போது, அத்தகைய யோசனை முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளதாக நியூஸ் பெர்ஸ்ட் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
  • மீனவர் விவகாரத்தில் அநாவசியமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதை எக்காரணத்திற்காகவும் நியாயப்படுத்த முடியாதென்பதில் இரு நாடுகளும் இணங்கியுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் சந்தர்ப்பங்களில், பாதிப்புகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் இந்தியா கோரியுள்ளது.கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற இருதரப்பு இணைந்த கடற்றொழில் செயற்குழுவின் மெய்நிகர் கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சமுத்திர சட்டத்தின் சில முக்கிய சரத்துகள் மீனவர் நேயமானதென தெரிவித்த இந்தியா, மீனவர் விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் கையாளுமாறும் இலங்கையிடம் தெரிவித்துள்ளது.

மீனவர் விவகாரத்தில் அநாவசியமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதை எக்காரணத்திற்காகவும் நியாயப்படுத்த முடியாதென்பதில் இரு நாடுகளும் இணங்கியுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் மீன்பிடி முறைமைகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் இதன்போது அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தியாவின் கோரிக்கை தொடர்பில் இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஐ.ரத்நாயக்கவிடம் வினவிய போது, அத்தகைய யோசனை முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளதாக நியூஸ் பெர்ஸ்ட் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

இலங்கையின் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க மற்றும் இந்திய கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஜடிந்திர நாத் ஸ்வாயின் உள்ளிட்டவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாகவும் ‘த ஹிந்து’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இந்தியா, இலங்கையிடம் விடுத்துள்ள கோரிக்கை! | Tamil Leader | We Lead the Nation