Tamil Leader News
முக்கியம்
அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●புதிய 2 பாதுகாப்புச் சட்டங்களால் GSP+ சலுகைக்கும் பாரிய அச்சுறுத்தல் - சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை!●குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●
செய்திகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை தமிழ் தரப்புகள் இன்று சந்திப்பு!

T

The Leader Desk

மார்ச் 28, 2022 • 3:20 AM

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை தமிழ்  தரப்புகள் இன்று சந்திப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பில் இன்று ஆரம்பமாகும் பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) மாநாட்டிற்காக இவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
  • இன்று காலை இலங்கைக்கு வருகை தந்துள்ள இவர் 30 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
  • இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
எழுத்து அளவு:

கொழும்பில் இன்று ஆரம்பமாகும் பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்)  மாநாட்டிற்காக இவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை  இலங்கைக்கு வருகை தந்துள்ள இவர் 30 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்திப்பதற்கு முன்னதாக இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

 இதற்கமைய இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ் தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அதன்படி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார்.

இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இந்திய இல்லத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அதன் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு, புதிய அரசியல் அமைப்பு உருவாக்க செயற்பாடு, 13 ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கம், வடக்கு மீனவர் விவகாரம், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேசப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவைளை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணி அண்மையில் தயாரித்துள்ள ஆவணம் குறித்தும் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்திய பிரதமர் மோடி இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போது அவரின் விஜயம் உறுதிப்படுத்தப்படவில்லை. 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை தமிழ் தரப்புகள் இன்று சந்திப்பு! | Tamil Leader | We Lead the Nation