Tamil Leader News
முக்கியம்
அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●புதிய 2 பாதுகாப்புச் சட்டங்களால் GSP+ சலுகைக்கும் பாரிய அச்சுறுத்தல் - சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை!●குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்க தயாராகும் முருந்தெட்டுவே ஆனந்த தேரர்!

T

The Leader Desk

மார்ச் 27, 2022 • 10:24 AM

அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்க தயாராகும் முருந்தெட்டுவே ஆனந்த தேரர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கம் தவறுகளை திருத்திக்கொண்டு மக்களாணைக்கு மதிப்பளித்து செயற்படாவிடின் நாமும் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்க நேரிடும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
  • அபயராம விகாரையில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது மக்கள் மத்தியில் நல்ல நிலைப்பாடு கிடையாது.
  • அவரை 6 மாத காலத்திற்கு அமைச்சு பதவியில் இருந்து விலக்கி வைக்குமாறு ஏற்கெனவே வலியுறுத்தினோம்.
எழுத்து அளவு:

அரசாங்கம் தவறுகளை திருத்திக்கொண்டு மக்களாணைக்கு மதிப்பளித்து செயற்படாவிடின் நாமும் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்க நேரிடும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,சிறந்த நோக்கத்திற்காக ஆட்சிமாற்றத்தில் முன்னின்று செயற்பட்டோம். அரசாங்கத்தை விமர்சிக்காதவர்கள் உள்ளவர் வீட்டில் இருந்து ஒரு குவளை தண்ணீர் பெற்றுக்கொள்வது தற்போது ஆச்சரியமாகவுள்ளது அந்தளவிற்கு முழு நாட்டு மக்களும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமர் உரிய கவனம் செலுத்த வேண்டும். நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது மக்கள் மத்தியில் நல்ல நிலைப்பாடு கிடையாது.

அவரை 6 மாத காலத்திற்கு அமைச்சு பதவியில் இருந்து விலக்கி வைக்குமாறு ஏற்கெனவே வலியுறுத்தினோம். ஒன்று அவரை பதவி நீக்க வேண்டும் அல்லது அவருக்கு பிறிதொரு அமைச்சு பதவியினை வழங்க வேண்டும்.

நாடு எதிர்க்கொண்டுள்ள நெருக்கடியான நிலைமை குறித்து எதிர்வரும் 31ஆம் திகதி அபயராம விகாரையில் சகல மகாசங்கத்தினரையும் ஒன்றினைத்து விசேட ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளோம்.

மகாசங்கத்தினரும் அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து அதிருப்தியடைந்துள்ளார்கள்.

31ஆம் திகதி எமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பல விடயங்களை பகிரங்கப்படுத்துவோம்.நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சிறந்த தீர்மானங்களை முன்னெடுப்போம் என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...