Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

'பிரகாசமான எதிர்காலம்' ஐ நோக்கி ஐக்கிய தேசிய கட்சி இன்று ஆர்ப்பாட்டம்!

T

The Leader Desk

மார்ச் 25, 2022 • 4:54 AM

'பிரகாசமான எதிர்காலம்' ஐ நோக்கி ஐக்கிய தேசிய கட்சி இன்று ஆர்ப்பாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • 'பிரகாசமான எதிர்காலம்' மற்றும் 'தேசிய ஒற்றுமை - தேசியக் கொள்கை உருவாகட்டும்' என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சி இன்று கொழும்பில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளது.
  • இந்த போராட்ட 3 மணியளவில் நான்கு வழிகளிலிருந்து வந்து ஹைட்பாக் மைதானத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
  • அதற்கமைய கொழும்பு டார்லி வீதி, விகாரமஹாதேவி பூங்கா, கொம்பனி தெரு மற்றும் பேப்ருக் பிளேஸ் ஆகிய நான்கு பகுதிகளிலும் இருந்து மக்கள் பேரணியாக வருகை தந்து ஹைட்பார்க் மைதானத்தில் ஒன்றுகூடவுள்ளனர்.
  • மக்கள் பேரணி ஹைட்பார்க் மைதானத்தில் ஒன்று கூடிய பின்னர் , ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாலை 4.30 மணியளவில் சத்தியாக்கிரகம் ஆரம்பமாகி 5.30 மணியளவில் நிறைவடையவுள்ளது.
எழுத்து அளவு:

 

'பிரகாசமான எதிர்காலம்' மற்றும் 'தேசிய ஒற்றுமை - தேசியக் கொள்கை உருவாகட்டும்' என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சி இன்று கொழும்பில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளது.

இந்த போராட்ட 3 மணியளவில் நான்கு வழிகளிலிருந்து வந்து ஹைட்பாக் மைதானத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைவரும் வெள்ளை ஆடையணிந்து மெழுவர்த்தி ஏற்றி இவ்வாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதற்கமைய கொழும்பு டார்லி வீதி, விகாரமஹாதேவி பூங்கா, கொம்பனி தெரு மற்றும் பேப்ருக் பிளேஸ் ஆகிய நான்கு பகுதிகளிலும் இருந்து மக்கள் பேரணியாக வருகை தந்து ஹைட்பார்க் மைதானத்தில் ஒன்றுகூடவுள்ளனர்.

மக்கள் பேரணி ஹைட்பார்க் மைதானத்தில் ஒன்று கூடிய பின்னர் , ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாலை 4.30 மணியளவில் சத்தியாக்கிரகம் ஆரம்பமாகி 5.30 மணியளவில் நிறைவடையவுள்ளது.

இந்த சத்தியாக்கிரகத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொள்வர் என்று ஐ.தே.க. எதிர்பார்த்துள்ளது.

நாடு கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமைக்கு தற்போதைய அரங்கமே காரணம் என கண்டனம் வெளியிட்டும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன கடந்த வாரம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தோடு, தேசிய மக்கள் சக்தி நுகேகொடையில் இவ்வாறான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது.

எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்ப்பதற்காக நீண்ட கால தேசிய கொள்கையொன்று எட்டப்பட வேண்டும் என்பதையும் , நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாக வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஐக்கிய தேசிய கட்சி; இவ்வாறு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...