Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஆட்சியாளர்களையும் கண்டித்தும் மொட்டையடிப்பு போராட்டத்தை முன்னெடுத்த பிரதேச சபை உறுப்பினர்!

T

The Leader Desk

மார்ச் 24, 2022 • 2:27 PM

ஆட்சியாளர்களையும் கண்டித்தும் மொட்டையடிப்பு போராட்டத்தை முன்னெடுத்த பிரதேச சபை உறுப்பினர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவர் ஏற்கனவே கொழும்பில் போராட்டக்கள மைதானத்தில் பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டமொன்றினையும் மேற்கொண்டிருந்தார்.
  • கார்த்தீஸ்வரன் மேற்கொண்ட இரு போராட்டங்களும் மக்களின் பேராதவுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தினால், நாடு அதாளபாதாளத்திற்கு சென்றுள்ளதை கண்டித்து அவர் இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:


இவர் ஏற்கனவே கொழும்பில் போராட்டக்கள மைதானத்தில் பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டமொன்றினையும் மேற்கொண்டிருந்தார்.


ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தினால், நாடு அதாளபாதாளத்திற்கு சென்றுள்ளதை கண்டித்து அவர் இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


பசறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன் மேற்கொண்ட இரு போராட்டங்களும் மக்களின் பேராதவுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சுமார் இரு மணித்தியாலங்கள் நீடித்த இந்த மொட்டையடிப்புப் போராட்டத்தையடுத்து, பசறை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற பசறை பிரதேச சபையின் மாதாந்த அமர்விலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் கலந்துகொண்டார்.


நாட்டில் பொதுமக்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்த பிரேரணையை முன்வைத்து ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் கண்டனப் பிரேரணையொன்றையும் முன்வைத்து உரையாற்றினார்.


அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு மற்றும் தட்டுப்பாடு, எரிபொருள் உள்ளிட்ட எரிவாயு ஆகியனவற்றைப் பெற மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை மற்றும் நாடு அனைத்துத் துறைகளிலும் வங்கரோத்து நிலையினை அடைந்துள்ளமைக்கு காரணமான ராஜபக்ஷக்களின் கூட்டத்தினரையும், ஆட்சியாளர்களையும் கண்டித்தும் மேற்படி மொட்டையடிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் இதன் போது கூறியுள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...