Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இலங்கையின் வான்பரப்பை இந்தியாவுக்கு விற்றுவிட்டதாக ஹரின் குற்றச்சாட்டு!

T

The Leader Desk

மார்ச் 24, 2022 • 4:08 AM

இலங்கையின் வான்பரப்பை இந்தியாவுக்கு விற்றுவிட்டதாக ஹரின் குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஹப்புத்தளையில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஹரீன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • இலங்கையின் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக கூறி நாட்டின் வான்பரப்பை இந்தியாவிற்கு 29 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யதுள்ளனர்.
  • இலங்கையின் நிலம் சீனாவுக்கு வழங்கப்பட்டது.
  • நாட்டின் துறைமுகம் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. இப்போது இலங்கையின் வான்பரப்பு இந்தியாவுக்கு 29 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது என்றார்.இலங்கையின் வான்பரப்பை விற்பனை செய்வது இதுவே முதல் முறை.
எழுத்து அளவு:

ஹப்புத்தளையில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஹரீன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

''ஒரு முக்கிய விடயத்தை மக்களுக்கு  சொல்ல வேண்டும் என்பதற்காக கிராமத்திற்கு வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த முடிவு செய்தேன். இன்று பாராளுமன்ற அமர்வு தினம் என்றாலும் அவசர விடயமாக இந்தப் பகுதியில் தங்கியிருக்கும் நான் இந்த முக்கியமான விடத்தை சொல்ல வேண்டிய உள்ளது.

இலங்கையில் இன்று மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மக்கள் வீதிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து செத்து மடிகின்றனர்.கடந்த அமைச்சரவையின் பின்னர் ஏழெட்டு அற்புதமான அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக கூறி  நாட்டின் வான்பரப்பை இந்தியாவிற்கு 29 மில்லியன் டொலர்களுக்கு  விற்பனை செய்யதுள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் பரப்பு சீனாவுக்குக் கொடுக்கப்பட்டது. இலங்கையின் நிலம் சீனாவுக்கு வழங்கப்பட்டது. நாட்டின் துறைமுகம் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. இப்போது இலங்கையின் வான்பரப்பு இந்தியாவுக்கு 29 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது என்றார்.இலங்கையின் வான்பரப்பை விற்பனை செய்வது இதுவே முதல் முறை. கடன் வாங்குவதற்கு முடிவே இல்லை.

இலங்கை மக்களின் வாழ்க்தை தரவுகளைப் பெறுவதற்கான உரிமை கூட இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு இலங்கையின் பாதுகாப்பை இந்தியாவிற்கு விற்று கச்சா எண்ணெய்  ஒப்பந்தத்தை  செய்கிறது. இலங்கையில் மக்கள் வரிசையில் நின்று அவதிப்படுகின்றனர்.

 எமக்கு இந்த அரசாங்கத்தை வழங்கினால், சம்பளம் வாங்காமல், எரிபொருள் பெற்றுக்கொள்ளாமல், பாராளுமன்றத்தில் இலசவ உணவு உண்ணாமல் ஒன்றரை வருடங்கள் வேலை செய்வோம்” என்றார் ஹரின் பெர்னாண்டோ.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையின் வான்பரப்பை இந்தியாவுக்கு விற்றுவிட்டதாக ஹரின் குற்றச்சாட்டு! | Tamil Leader | We Lead the Nation