Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சர்வகட்சி மாநாடு : ரணிலிடம் மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி

T

The Leader Desk

மார்ச் 24, 2022 • 3:12 AM

சர்வகட்சி மாநாடு : ரணிலிடம் மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தின் போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதி மன்னிப்புக் கோரவேண்டிய நிலை உருவானது.
  • என்பதை முதலில் தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அஜித் நிவார்ட் கப்ராலின் கருத்திற்கு அவர் அதிருப்தி வெளியிட்டார்.
  • ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து தெளிவுப்படுத்திய மத்திய வங்கி ஆளுநர், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் தெரிவித்ததடையடுத்து இந்த சூழ்நிலை உருவானது.
எழுத்து அளவு:


நேற்று இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தின் போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதி மன்னிப்புக் கோரவேண்டிய நிலை உருவானது.


ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து தெளிவுப்படுத்திய மத்திய வங்கி ஆளுநர், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் தெரிவித்ததடையடுத்து இந்த சூழ்நிலை உருவானது.


“கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார தாக்கம் தீவிரமடைவதற்கு நல்லாட்சி அரசாங்கம் காரணம் என தரப்படுத்தல்கள் ஊடாக நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை எடுத்துரைத்தார்.பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கு கடந்த அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்” இதன் போது மத்திய வங்கி ஆளுநர் குற்றஞ்சாட்டினார்.


மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த அரசாங்கத்தினால் தான் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளமை வருந்தத்தக்கது. பொருளாதார பாதிப்பிற்கு அனைத்து அரசாங்கமும் காரணம் என்று குறிப்பிடுவதாயின் விஜயன் காலத்தில் இருந்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும் என்றார்.


அத்தோடு, அரசியல் நோக்கமில்லாத வகையில் தான் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளோம். இவ்விடயத்தில் அரசியல் பேசுவதை முதலில் தவிர்த்துக்கொள்ளுங்கள்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விளையாடுவது பொருத்தமற்றது. என்பதை முதலில் தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அஜித் நிவார்ட் கப்ராலின் கருத்திற்கு அவர் அதிருப்தி வெளியிட்டார்.


இதற்கு பதில் வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசியல் காரணிகள் பற்றி பேசும் தருணம் இதுவல்ல. உண்மையான நோக்கில் சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநரது கருத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்தார்.


இதேபோன்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை கோரி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் கூட்டத்தில் திக்குமுக்காட செய்திருந்தார்.


எவ்வாறாயினும் நேற்றைய நாள் கூட்டத்தில் அதிகமாக பேசப்பட்ட நபராக ரணில் விக்ரமசிங்க உள்ளார். அவரின் அரசியல் மற்றும் வரலாறு தொடர்பான அறிவினால் அவர், அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...