Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சர்வகட்சி மாநாட்டில் ரணிலின் கேள்வியால் உண்மையை உளறிய பஷில்!

T

The Leader Desk

மார்ச் 23, 2022 • 9:30 AM

சர்வகட்சி மாநாட்டில் ரணிலின் கேள்வியால் உண்மையை உளறிய பஷில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று நடைபெற்ற அமர்வில் , ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்தார்.
  • முதலில், தமக்கு இதுவரை சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கிடைக்கவில்லை என பஷில் ராஜபக்ஸ தெரிவித்தார்.எனினும் ரணில் விக்ரமசிங்க குறுக்கிட்டு எழுப்பிய கேள்விகளை அடுத்து, நிதியத்தின் அறிக்கை வரைவு கிடைத்துள்ளதை நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.
  • தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
எழுத்து அளவு:

இன்று நடைபெற்ற அமர்வில் , ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு,  நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்தார்.

முதலில், தமக்கு இதுவரை சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கிடைக்கவில்லை என பஷில் ராஜபக்ஸ தெரிவித்தார்.எனினும் ரணில் விக்ரமசிங்க குறுக்கிட்டு எழுப்பிய கேள்விகளை அடுத்து, நிதியத்தின் அறிக்கை வரைவு கிடைத்துள்ளதை நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும், தாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பல்வேறு சவால்களை விடுத்துள்ளமையினால், அந்த வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது என பஷில் ராஜபக்ஸ பதிலளித்தார். 

நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய போதும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக சபை முதல் தெரிவித்திருந்த போதும் இதுவரை அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியிருந்தார்.

“வரி தொடர்பான விவாதமும் சபையில் இடம்பெற இருப்பதால் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக  விவாதிப்பது கடினமாகும்.  இது எமது வரப்பிரசாதத்தை மீறும் செயலாகும். அதனால் நிதி அறிக்கையை விரைவாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் உட்பட நிதிச்சபை அதிகாரிகளுக்கு இதுதொடர்பாக அறிவிக்கவேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் பஷில் ராஜபக்ஸ  சர்வதேச நாணய நிதியத்தின் நிதி அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு ரணில் விக்ரமசிங்க பல தடவைகள் தெரிவித்திருந்த போதிலும் அந்த அறிக்கை இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. அறிக்கை கிடைத்தவுடன் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க தயாராக இருக்கின்றோம் என கூறியிருந்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...