Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பம்!

T

The Leader Desk

மார்ச் 23, 2022 • 6:52 AM

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த சர்வகட்சி மாநாடானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது.
  • சர்வகட்சி மாநாடு என்ற பெயரில் ஊடக கண்காட்சி மாத்திரமே இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவரும்,முன்னாள் வலுசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
  • கடந்த காலங்களில் சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சர்வகட்சி மாநாட்டை நடத்தும் படி அரசாங்கத்தை வலியுறுத்தி வந்த போதும், இந்த அரசாங்கம் இது தொடர்பில் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
எழுத்து அளவு:

இதன்படி ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ரெலோ, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளது.

குறித்த சர்வகட்சி மாநாடானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில்  முன்னெடுக்கப்படுகிறது.

 மாநாட்டில் உரையாற்றிய  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, இந்த சர்வகட்சி மாநாடானது, தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான முயற்சி என சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த சர்வகட்சி மாநாட்டில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமாமஜக்கட்சி, எமது மக்கள் சக்தி கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ் அரசுக்கட்சி, புளொட், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன மாநாட்டில் பங்கேற்றுள்ளன.

கடந்த காலங்களில் சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சர்வகட்சி மாநாட்டை நடத்தும் படி அரசாங்கத்தை வலியுறுத்தி வந்த போதும், இந்த அரசாங்கம் இது தொடர்பில் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

எனினும் தற்போது அரசாங்கம் தன்னுடைய பிரச்சினைகளை இந்த சந்தர்ப்பத்தில் மூடி மறைத்துக்கொள்வதற்காகவே, இந்த சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கு முனைந்திருப்பதாகவே பெரும்பாலானோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சர்வகட்சி மாநாடு என்ற பெயரில் ஊடக கண்காட்சி மாத்திரமே இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவரும்,முன்னாள் வலுசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திடம் உண்மையாகவே இருக்குமாயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி தலைவர்களுடன்,பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அதனை அமைச்சரவையில் கலந்தாலோசித்து அதன் பிறகு ஏனைய கட்சிகளை ஒன்றினைத்து சர்வ கட்சி கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பம்! | Tamil Leader | We Lead the Nation