Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

அகதிகளாக இந்தியா சென்ற இலங்கையர் ஆறு பேர் மீது வழக்கு பதிவு!

T

The Leader Desk

மார்ச் 22, 2022 • 4:34 PM

  அகதிகளாக இந்தியா சென்ற இலங்கையர் ஆறு பேர் மீது வழக்கு பதிவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை, இலங்கைக்கு அருகே உள்ள இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு நான்கு மாத கைக்குழந்தையுடன் ஆறு பேர் அகதிகளாக சென்றடைந்துள்ளனர்.
  • நேற்று திங்கட்கிழமை (21) இரவு மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரி கிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர்,மோசஸ் உள்ளிட்ட ஆறு பேர் ஒரு கண்ணாடி இழை படகில் இவ்வாறு தமிழகம் நோக்கி பயணித்துள்ளனர்.
  • அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை 1 மணியளவில் தனுஷ்கோடியை அடுத்துள்ள 4ஆவது மணல் திட்டு பகுதியில் சென்று இறங்கியுள்ளனர்.
  • அங்கு காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வந்த 6 பேரையும் தகவலறிந்த கடலோர காவல்படை மண்டபம் முகாமிற்கு சொந்தமான கப்பல் மூலம் மீட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.
எழுத்து அளவு:

இந் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை, இலங்கைக்கு அருகே உள்ள இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு நான்கு மாத கைக்குழந்தையுடன் ஆறு பேர் அகதிகளாக சென்றடைந்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (21) இரவு மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரி கிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர்,மோசஸ் உள்ளிட்ட ஆறு பேர் ஒரு கண்ணாடி இழை படகில் இவ்வாறு தமிழகம் நோக்கி பயணித்துள்ளனர்.

அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை 1 மணியளவில் தனுஷ்கோடியை அடுத்துள்ள 4ஆவது மணல் திட்டு பகுதியில் சென்று இறங்கியுள்ளனர். அங்கு காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வந்த 6 பேரையும் தகவலறிந்த கடலோர காவல்படை மண்டபம் முகாமிற்கு சொந்தமான கப்பல் மூலம் மீட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெறுக்கடிக்கு ஈடுகொடுக்க முடியாது இவ்வாறு இந்த ஆறு இலங்கை தமிழர்களும் தமிழகத்துக்கு அகதிகளாக சென்றுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் அனுமதி இன்றி தமிழகத்துக்குள் நுழைந்ததால் குறித்த ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்த மெரைன் பொலிஸார் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக செல்லக் கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...