Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஆலோசனைக் குழுவின் ஐந்து பரிந்துரைகள்!

T

The Leader Desk

மார்ச் 22, 2022 • 5:57 AM

தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஆலோசனைக் குழுவின் ஐந்து பரிந்துரைகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேசிய பொருளாதார சபை உறுப்பினர்களை இன்று காலை முதல் தடவையாக சந்தித்த போது பல யோசனைகளை அவர்கள் முன்வைத்தனர்.
  • நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நியமிக்கப்பட்ட தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 16 பேரைக் கொண்ட ஆலோசனைக் குழுவொன்று மார்ச் மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.
  • விநியோக தடைகளைத் தவிர்ப்பதன் மூலம் நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்துதல்.
எழுத்து அளவு:


ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேசிய பொருளாதார சபை உறுப்பினர்களை இன்று காலை முதல் தடவையாக சந்தித்த போது பல யோசனைகளை அவர்கள் முன்வைத்தனர்.


நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நியமிக்கப்பட்ட தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 16 பேரைக் கொண்ட ஆலோசனைக் குழுவொன்று மார்ச் மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.


குழுவினால் முன்வைக்கப்பட்ட ஐந்து முன்மொழிவுகள் பின்வருமாறு.

  1. சர்வதேச நிதி உதவிகளை முன்மொழிவதற்காக மத்திய வங்கி மற்றும் திறைசேரியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளைக் கொண்ட தொழிநுட்பக் குழுவொன்றை உடனடியாக நியமித்தல்.
  2. நிதி ஆலோசகர் ஒருவரை உடனடியாக நியமித்தல் மற்றும் சட்ட ஆலோசகர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்தல்.
  3. சர்வதேச நிதி உதவிகளை முன்மொழிவதற்காக மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை தொழிநுட்பக் குழு விரைவாக முன்வைக்க வேண்டும்.
  4. நிதி அமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, நிபுணர் குழு ஒன்றை அடையாளம் காணல்.
  5. விநியோக தடைகளைத் தவிர்ப்பதன் மூலம் நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்துதல்.


பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, சரியான திசையில் வழிநடத்துவதற்கு மறுநிதியளிப்பை வலுப்படுத்த குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஆலோசனைக் குழு மேலும் பரிந்துரை செய்தது.


உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் விளைவுகளை இந்நாடும் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. பரிமாற்ற நெருக்கடி இதில் மிக முக்கியமானது. எதிர்கொள்ளும் சவால்களை சரியாக நிர்வகிப்பதன் மூலம், ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை குறுகிய காலத்தில் தவிர்க்க முடியும் என ஆலோசனைக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...