Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரும் இராஜாங்க அமைச்சர்!

T

The Leader Desk

மார்ச் 22, 2022 • 4:41 AM

பொது மக்களிடம்  பகிரங்க மன்னிப்பு கோரும் இராஜாங்க அமைச்சர்! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலன்னறுவை ஹிகுரான்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • இன்று கறுப்பு சந்தை வர்த்தகர்கள் அதிகம் உழைக்கிறார்கள்.
  • ஒரு மூடை சீமெந்தினை 3 ஆயிரத்திற்கு விற்கிறார்கள்.நாட்டு மக்களிடம் உண்மையை குறிப்பிட வேண்டும்.
  • தவறுகளை திருத்திக்கொண்டால் முன்னேறி செல்லலாம். பெரும்பாலான அரச நிறுவனங்களின் ஊழியர்கள் பகல் 12 மணிக்கு பிறகு சேவையாற்றுவதில்லை.
எழுத்து அளவு:

பொலன்னறுவை ஹிகுரான்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாரிய நெருக்கடிகளை தற்போது எதிர்க்கொண்டுள்ளோம். மக்களுடன் உரையாற்றும் போது அவர்கள் வெளியில் புன்முறுவலுடன் கதைத்துக்கொண்டு ஆழ்மனதில் அரசாங்கத்தையும், எம்மையும் விமர்சிப்பார்கள் என்பதை நன்கு அறிவோம்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் சிறந்தவர்கள், மிக நன்மை, ஆம் சேர் என எவ்வளவு நாட்களுக்கு குறிப்பிட முடியும்.

நாட்டு மக்கள் இன்று அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.மக்களை எடுத்துக்கொண்டால் நுகர்வோர், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதுவே உண்மை. அரச சேவையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அரச சேவையாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள். பிரச்சினைகளை மக்களிடமிருந்து மறைப்பதால் எவ்வித பயனும் கிடைக்கப்பெறாது.ஒரு சிலர் கறுப்பு வர்த்தகர்களை கொண்டு வந்து உரம் விநியோகத்தை முன்னெடுத்தார்கள். இன்று கறுப்பு சந்தை வர்த்தகர்கள் அதிகம் உழைக்கிறார்கள்.

சமையல் எரிவாயுவை நியாயமற்ற விலையில் விற்கிறார்கள். ஒரு மூடை சீமெந்தினை 3 ஆயிரத்திற்கு விற்கிறார்கள்.நாட்டு மக்களிடம் உண்மையை குறிப்பிட வேண்டும். தவறான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் ஒருசில நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். தவறுகளை திருத்திக்கொண்டால் முன்னேறி செல்லலாம். 

பெரும்பாலான அரச நிறுவனங்களின் ஊழியர்கள் பகல் 12 மணிக்கு பிறகு சேவையாற்றுவதில்லை. இன்று அனைவரும் ஒருவரையொருவர் தன்னிச்சையாக விமர்சித்துக்கொள்கிறோம்.

கறுப்பு சந்தையில் 8 ஆயிரம் ரூபாவிற்கு உரத்தை பெற்று விவசாய நடவடிக்கையில் ஈடுப்பட்டு விளைச்சலில்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடமும், எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகிவற்றை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொது மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...